கைது செய்யப்பட்டிருக்கும் இளவரசர்கள்
சொத்தை எழுதிக்கொடுத்தால் விடுவிப்பு! –
பெரும் புள்ளிகளைக் கதிகலங்கவைத்துள்ள சவூதி அரசு
சவூதி
அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை
மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர்
முகமது பின்
சல்மான்.
சமீபத்தில், பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில், அரச குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். 3 அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. சவூதியின் பெரும் பணக்காரரான அல் வலீத் பின் தலாலும் ஊழல் ஒழிப்புக் குழுவின் கழுகுப் பார்வையிலிருந்து தப்பவில்லை.
குழு அமைக்கப்பட்டு இரண்டு வாரங்கள் முடிந்துள்ள நிலையில், இளவரசர்கள், பெரும் பணக்காரர்கள், அமைச்சர்கள் என இதுவரை 200 பேரை ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்துள்ளது சவூதி அரசு. ஊழல் குற்றங்களால் சவூதியின் வளர்ச்சி பாதிக்கப்படக்கூடாது என்பதே இளவரசர் சல்மானின் நோக்கமாம்.
இந்நிலையில், இன்று காலை சவூதி ஊடகங்கள், சவூதி அரசு ஊழல் குற்றவாளிகளிடம் வைத்துள்ள நிபந்தனை பற்றி செய்தி ஒன்றை வெளியிட்டன. அதாவது, பல்வேறு ஊழல் குற்றங்களின் கீழ் கைதாகியுள்ள பெரும் புள்ளிகள், தங்களின் 70 சதவிகித சொத்துகளை சவூதி அரசுக்கு எழுதிக்கொடுத்தால் உடனே விடுவிக்கப்படுவார்கள் என்று சவூதி அரசு நிபந்தனை வைத்துள்ளதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவருகின்றன.
ஊழல்
செய்த பணமுதலைகளிடம்
சவூதி அரசு
வைத்துள்ள டிமாண்ட்,
உலக அரங்கை
திரும்பிப் பார்க்கச்செய்துள்ளது. கடந்த
ஆண்டு சவூதியில்,
பட்ஜெட் பற்றாக்குறை
ஏற்பட்டு பொருளாதார
மந்தநிலை உருவானது.
கறுப்புப் பணம்
பதுக்கலும், ஊழலும்தான் சவூதியின் பொருளாதார வீழ்ச்சிக்குக்
காரணம் என்று
சல்மான் கருதினார்.
எனவே, ஊழல்
செய்தவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டு கைதுசெய்தார். தற்போது,
அவர்களின் 70 சதவிகித சொத்துகளை நாட்டின் வளர்ச்சிக்குக்
கொடுக்கச்சொல்லி அதிரடி காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment