மாலைத்தீவுகளில் அவசரகாலநிலை பிரகடனம்:
139 பேர் கைது

மாலைத்தீவுகளில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்நாட்டின் அவசரநிலை விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மாலைத்தீவுகள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன், அங்குள்ள 12 எம்பிக்களை தகுதிநீக்கம் செய்திருந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள எம்.பிக்களையும் எதிர்கட்சி தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று அந்நாட்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக, உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே, ஜனாதிபதி அப்துல்லா யாமீன் வீட்டுக்காவலில் வைத்தார். மேலும், முன்னாள் ஜனாதிபதி மவுமீன் அப்துல் கயூமையும் பொலிஸார் கைது செய்தனர்.
இதையடுத்து, கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி நாடு முழுவதும் அவசரநிலையை பிரகடனம் செய்து ஜனாதிபதி யாமீன் உத்தரவிட்டார்.
இதனால், அரச அலுவலகங்கள் அனைத்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. இந்த அவசர நிலை பிரகடனம் மார்ச் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
இந்நிலையில், மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய 139 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்நாட்டின் அவசரநிலை விதிகளின் கீழ் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top