மோட்டார் சைக்கிளில்
7 கண்டங்களை கடந்த பாட்டி

பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் தன் மோட்டார் சைக்கிளில் 7 கண்டங்களையும் கடந்து (சுமார் 8000 மைல்கள்) சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டனை சேர்ந்த ஸ்டீபன் ஜெவ்சன் (43) என்பவர் தனது மோட்டார சைக்கிள் மூலம் 7 கண்டங்களையும் பயணிக்கும் பயணத்தினை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தார்.
கொளிவன் பெ-ன் வடக்கு வேல் பகுதியில் இருந்து தனது 250cc Dirt மோட்டார் சைக்கிள் மூலம் பயணித்த தனது பயணித்தினை இரண்டு நாட்களுக்கு முன்னர் லண்டன் திரும்பியதன் மூலம் முடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,
வாழ்வில் ஒருமுறையாவது இவ்வாறான சாகசப் பயணத்தில் ஈடுபடவேண்டும் என்பது ஆசை. ஆனால் விரைவிலேயே திருமணம் ஆகிவிட்டது.
நான் என் முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது என் வயது 18, பின்னர் காலங்கள் உருண்டோட என்னால் இந்த சாகசத்தினை மேற்கொள்ள முடியவில்லை. தற்போது காலம் கூடியது சாகசத்தினை மேற்கொண்டேன்என தெரிவித்துள்ளார்.
தன் மகன் சற்று வளர்ந்து தன்னைத் தானே பார்த்துக்கொள்ளும் நிலைமைக்கு வந்த பிறகு தனது பயணத்தினை மேற்கொண்ட அவர், இப்பயணத்தில் இந்தியாவினை எட்டிபோது அவரது மகனுக்கு ஓர் மகன் பிறந்த செய்தியினை அறிந்துக்கொண்டார். அதாவது தான் பாட்டி ஆன விஷயத்தினை அறித்துக்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் 7 கண்டங்களையும் பயணித்த முதல் பெண் இவர் தான் என்ற சொல்வதை விட, முதல் பாட்டி என்றும் சொல்லலாம் அல்லவா?




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top