ஆப்கானிஸ்தானை உலுக்கும்குழந்தை ட்ரம்ப்
உறவினர்கள், நண்பர்களால் அன்னியப்படுத்தப்பட்ட
சையத் அசாத்துல்லா குடும்பம்

முஸ்லிம்களின்  விரோதி என்று பெயரெடுத்துவிட்ட அமெரிக்க ஜனாதிபதியின் பெயரை தன் 3வது குழந்தைக்குச் சூட்டிய ஆப்கான் தம்பதியினர் கடும் வசைகளையும், அவதூறுகளையும் அனுபவித்து வருகின்றனர். பெயரிட்ட தந்தை தன் குடும்பத்தினர், உறவினர்களின் விரோதத்தையும் சம்பாதிக்க நேரிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் வெற்றியை மனதில் கொண்டு தன் குழந்தையும் வாழ்க்கையில் பெரிய வெற்றியடைய வேண்டும் என்ற கனவில் சையத் அசாத்துல்லா பூயாவும் இவரது மனைவியும் தங்களின் 3வது குழந்தைக்கு அமெரிக்க ஜனாதிபதியின் பெயரான டொனால்ட் ட்ரம்ப் என்று வைத்தனர். முகநூலில் இவர்களது இந்தச் செயல் ஐடி புரூஃபுடன் வெளியிடப்பட, சமூக வலைத்தளங்களில் ஆப்கான்வாசிகளின்துரோகிஎன்ற பட்டப்பெயருடன் இந்தத் தம்பதியினர் வளையவருகின்றனர்.
சில பேஸ்புக் ஆர்வலர்கள் துரோகியின் பெயரை வைப்பதா என்று கேட்டு, தந்தை சையத்தை கொலை செய்யப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். மற்றவர்களோ அக்கறையுடன் இந்தப் பெயரை வைத்து குழந்தையின் வாழ்க்கையை அபாயகரமாக்கி விட்டீர்கள் என்று சாடியுள்ளனர்.
ஆசிரியராகப்ர் பணியாற்றும் குழந்தை ட்ரம்பின் தந்தை சையத், .எஃப்.பி நிறுவனத்துக்குக் கூறும்போது,
 தொடக்கத்தில் ஆப்கான் மக்கள் இந்தப் பெயருக்கு இவ்வளவு உணர்வுபூர்வமாக வினையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. யாரோ ஒருவர் ஆன்லைனில் புகைப்படத்துடன் இத்தகவலை வெளியிட சர்ச்சையாகி நான் என் பேஸ்புக் கணக்கை மூட வேண்டியதாயிற்று. வீட்டை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை, வந்தால் கெட்டக் கெட்ட வார்த்தைகளினால் திட்டுதான் கிடைக்கிறதுஎன்று வருந்தியுள்ளார்.
காபூலில் ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் பகுதியில் வசிக்கும் சையத்துக்கு கடும் மிரட்டல்கள் வந்து ஊரை விட்டு போய் விடவும் அச்சுறுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு 2016-ல் இந்த ஆப்கன் டொனால்ட் ட்ரம்ப் பிறந்தான். ஜனாதிபதியின் டொனால்ட் ட்ரம்ப் பற்றிய பெர்சிய மொழிப் புத்தகங்களை வாங்கி சையத் படித்து உத்வேகம் அடைந்துள்ளார், இதில் ஒரு புத்தகத்தின் தலைப்புஹவ் டு கெட் ரிச்’, இதனை அவர் நூலகத்திலிருந்து எடுத்துள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பற்றி நிறைய ஆய்வு செய்தேன் அதனையடுத்தே என் மகனுக்கு அவர் பெயரைச் சூட்ட உத்வேகம் பெற்றேன்.
ஆனால் சையத்தின் பெற்றோர் முதலில் இவரை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் இவர் பெயரை உண்மையிலேயே தேர்வு செய்ய குடும்பத்தினருடனே உறவு முறிந்தது. அதன் பிறகே தன் இளம் குடும்பத்துடன் அவர் காபூலுக்குக் குடிபெயர்ந்தார். டொனால்ட் ட்ரம்ப் பெயரினால் உறவினர், பெற்றோர், ஆப்கான்வாசிகள் அனைவரிடமிருந்தும் அன்னியமாகி விட்டார் சையத்.
ஆனால் நாளை என் பையன் டொனால்ட் ட்ரம்ப் அவனது பெயருக்காக தன் வகுப்பறை சக மாணவர்களினால் இழிவு படுத்தப்பட்டாலும் அடித்தாலும் கவலையில்லை நான் இவன் பெயரை மாற்றமாட்டேன், மற்றவர்கள் கிடக்கிறார்கள், என்று பிடிவாதமாகக் கூறுகிறாராம் தந்தை சையத்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top