அம்பாறை அசம்பாவிதம்  :

பக்கச்சார்பற்ற விசாரணை
பிரதமரின் உறுதி

அம்பாறை அசம்பாவிதம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பவத்தின் போது பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில்  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணை முன்னெடுப்பதாகவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.
சிங்கப்பூருக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு நாடு திரும்பிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அம்பாறை விவகாரம் தொடர்பில் உடனடியாக அமைச்சர்களான, ரிஷாட் பதியுதீன், கபீர் ஹாஷிம், ரவூப் ஹக்கீம், ஆகியோர்களைச் சந்தித்து பேச்சுவார்ததை நடத்தியுள்ளார். அச்சந்திப்பில் பொலிஸ் மா அதிபரும் கலந்துகொண்டுள்ளார்.
குறித்த அசம்பாவிதம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், சம்பவத்தின் போது பொலிஸாரின் செயற்பாடு தொடர்பில்  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தலைமையில் விசாரணை முன்னெடுப்பதாகவும் அதன்போது பிரதமர் உறுதியளித்துள்ளார்.
அம்பாறையில் கடந்த திங்கட் கிழமை இரவு இடம்பெற்ற அசம்பாவிதமானது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அம்பாறை பொலிஸாரும் அச்சதிகார செயலுக்கு பக்கபலமாக இருந்து முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்தியுள்ளனர். ஆகவே பொலிஸார் மீது சிறுபான்மைச் சமூகம் நம்பிக்கை இழந்து வருகிறது. இது நல்லாட்சிக்கு உகந்ததல்ல. மேலும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்துள்ளனர். இந்நிலை நீடித்தால் நாட்டில்  சட்டம், ஒழுங்கு கேலிக்கூத்தாகி விடும் என முஸ்லிம் அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top