ஆற்றில் விழுந்த பீ.எம்.டப்ளியூ கார்
உரிமையாளருக்கு விளக்கமறியல்



பத்தரமுல்லதலவத்துகொட பிரதேசத்தின் தியவன்னா ஓயாவில் விபத்துக்குள்ளான பி.எம்.டபிள்யு காரின் உரிமையாளரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், இன்று 20 ஆம் திகதி கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேகநபர், நேற்றைய தினம் (19) சட்டத்தரணி ஊடாக பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இதனையடுத்து, சந்தேகநபர் வைத்திய பரிசோதனைகளுக்காக, முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இசிபதானை வீதியிலுள்ள கார் வர்த்த நிலைய உரிமையாளர் ஒருவரின் மகனின் பெயரில் குறித்த கார் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும், விபத்துக்குள்ளானபோது, குறித்த காரை அவரே ஓட்டிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
குறித்த விபத்து காரணமாக கிம்புலாவெல - தளவத்துகொட வீதியில் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
காரை ஓட்டிச் சென்றவர் அமைச்சர் கபீர் ஹாசிமின் உறவினர் என சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தது.

ஆயினும் குறித்த வாகனத்தை ஓட்டிச் சென்றவர் தனது உறவினர் எனவும், அவருக்கும் தனது அமைச்சுக்குமோ அல்லது தனிப்பட்ட அலுவலக பணியிலோ எவ்வகையிலும் சம்பந்தமும் இல்லை என அமைச்சர் கபீர் ஹாசிம் நேற்று முன்தினம் (18) தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top