நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு
எதிராக கடும் நடவடிக்கை
மத்திய வங்கி எச்சரிக்கை
நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு பத்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படலாம் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்ன தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த நாணயத்தாள்களை வர்;த்தக வங்களில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31ம் திகதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2018 மார்ச் 31ஆம் திகதிக்குள் இத்தகைய நாணயத் தாள்களை மாற்றிக் கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
0 comments:
Post a Comment