கண்டி வன்முறைகளை
கண்டித்து
இன்று சென்னையில் முற்றுகைப் போராட்டம்
முஸ்லிம்களை மையமாக வைத்து அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை
கண்டிக்கும் வகையிலும் அதற்கு
நீதிகோரியும் சென்னையிலுள்ள
இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம்
இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.
சீமான்
தலைமையிலான
நாம் தமிழர் கட்சியினரும்
தி.வேல்முருகன்
தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் கூட்டாக இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போராட்டத்தில் இலங்கை
உணர்வாளர்கள் அனைவரையும் பங்கெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இப்
போராட்டம் சம்பந்தமாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியின்
தலைவர் தி.வேல்முருகன் தெரிவிக்கையில்,
இலங்கையில் நடைபெற்ற
யுத்தம் காரணமாக
ஏற்கனவே எமது
உறவுகள் சிதைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அவர்களுக்காக
நீதிகோரி போராட்டங்களையும் அழுத்தங்களையும்
தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றோம்.
இவ்வாறான தருணத்தில் தற்போது
இலங்கையில் மற்றொரு
சிறுபான்மை மக்களான முஸ்லிம்களை மையமாக
வைத்து பல்வேறு சம்பவங்கள் அந்
நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்றுள்ளன. அடக்குமுறைக்கு உட்படுத்துகின்ற
எந்தவொரு சம்பவங்களும்
கண்டிக்கத்தக்கவையேயாகும்.
அதனடிப்படையில் உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
தமிழ், முஸ்லிம் மக்களை சம
உரிமையுடன் நடத்தி
அவர்களுக்கான வாழ்வுரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென்பதை அழுத்தம்
திருத்தமாக இடித்துரைக்கும் வகையில்
நாம் மாபெரும் கண்டன முற்றுகைப்
போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்.
இதில்
அனைத்து உணர்வாளர்களும் பங்கெடுத்து எமது கண்டனத்தையும் செய்தியையும்
இலங்கை அரசாங்கத்துக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்
என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment