உலகின் கடைசி ஆண் வெள்ளை
காண்டாமிருகமும் இறந்தது
உலகின் கடைசி வெள்ளை ஆண் காண்டாமிருகம் உயிரிழந்துவிட்டதாக ஓய் பிஜேடா (OI Pejeta) என்ற வனவிலங்குகளுக்கான தனியார்
நிறுவனம்
தெரிவித்துள்ளது.
சுடான் என்ற பெயரைக் கொண்டுள்ள இந்த ஆண் காண்டாமிருகத்துக்கு 45 வயதாகிறது. இது குறித்து அந்தத் தனியார் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
`சுடானுக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் எலும்புகள் மற்றும் தசைகள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தன, அதன் தோல்களிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன.
நாங்கள் அதை எப்படியாவது உடல் உபாதைகளிலிருந்து மீட்டெடுக்க முயற்சி செய்தோம் ஆனால், கடந்த மாதம் அதனால் எழுந்துகூட நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து நாங்கள் சுடானை கருணைக்கொலை செய்ய முடிவெடுத்தோம் அதை உயிருடன் இருக்க வைக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால், இறுதியில் சுடான் இறந்துவிட்டது.
சுடானுடன் இரு பெண் வெள்ளை காண்டாமிருகங்களும் இருந்தன. ஆனால். சுடான் மட்டுமே உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமாக இருந்தது. இப்போது அதுவும் இறந்துவிட்டது’ எனத் தெரிவித்துள்ளது.
இந்த வெள்ளை காண்டாமிருகத்தின் இறப்பு வன விலங்கு ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment