முஸ்லிம்களுக்கு எதிராக
திகனயில் இடம்பெற்ற சம்பவங்கள்
ஜெனிவாவில் எதிரொலிப்பு
காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன
கண்டி திகனயில் திட்டமிட்டவகையிலேயே முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள்
மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம் தவறிவிட்டது என்று ஜெனிவாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற இலங்கை குறித்த உபகுழுக்கூட்டம் ஒன்றில் சர்வதேச முஸ்லிம் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய
முஸ்லிம் பிரதிநிதிகள் மேலும் குறிப்பிடுகையில்,
கண்டி
திகன பகுதியில் முஸ்லிம்கள்
மீது
திட்டமிட்டவகையிலேயே தாக்குதல்கள்
முன்னெடுக்கப்பட்டன. இந்த சந்தர்ப்பத்தில் சட்டம்,
ஒழுங்கை நிலைநாட்ட அரசாங்கம்
தவறிவிட்டது. அதனால்தான் வன்முறைகள் அதிகரித்தன. இதன் பின்னர் இவ்வாறு வன்முறைகள்
இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது.
குறிப்பாக
சர்வதேச சமூகம்
இதன்மூலம் அழுத்தத்தைப்
பிரயோகிக்க முன்வரவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உபகுழுக்கூட்டத்தில்
கலந்துகொண்டிருந்த சர்வதேச
மனித உரிமை
செயற்பாட்டாளர் லுக்மான்
ஹரீஸ் குறிப்பிடுகையில்,
முஸ்லிம்களுக்கு
எதிராக இலங்கையில்
இனவாதக் கருத்துக்கள் பரப்பப்பட்டன. அதுமட்டுமன்றி திகனயில்
இடம்பெற்ற வன்முறைகளால் சிங்கள
மக்கள் மகிழ்ச்சியில்
இருப்பதாக இனவாதக்
கருத்துக்கள் பரப்பப்படுகின்றன.
தனிப்பட்ட
ரீதியான சம்பவங்களை
எடுத்து இவ்வாறு
இனவாத பரப்புரைகளை
மேற்கொள்கின்றனர். கண்டி வன்முறையானது
வீதியில் இடம்பெற்ற
ஒரு சம்பவத்தினால்
உருவாக்கப்பட்டது. அதாவது இரண்டு
சமூகங்களுக்குமிடையில் முரண்பாடுகள்
இருப்பதாக வெளிக்காட்டுவதற்கு இந்த வீதியில் இடம்பெற்ற
சம்பவம் வெளிக்காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி
முஸ்லிம்கள் போதைப் பொருட்களை இலங்கைக்குள் கொண்டுவருகின்றனர்
என்ற கருத்துக்களையும்
பரப்புகின்றனர்.
அப்போது முஸ்லிம் நபர் கைது செய்யப்பட்டார்
என்றே செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் ஒரு பெரும்பான்மையினர்
ஒருவர் கைது
செய்யப்படும்போது அங்கு இன ரீதியான
அடையாளம் வெளிப்படுத்தப்படுவதில்லை
என்று தெரிவித்துள்ளார்.
இதே
வேளை இந்த
உபகுழுக்கூட்டத்தில் கண்டியில் இடம்பெற்ற
வன்முறைகள் தொடர்பான காணொளிகளும்
ஒளிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment