இறைவா! எங்களுக்கு நல்லறிவைத்தா...!

##################################################




நாங்கள் நல்லாட்சியில் தீமிதிக்கும்
நாதியற்ற நாட்டுப் பிரசைகள்.
எங்கள் நாட்டில் எங்களுக்கு,
எல்லாம் இருப்பதாக, அரசாங்கம்,
பாராளுமன்றத்திலும், பகிரங்க மேடைகளிலும்,
பறைசாற்றி, பீத்துக் கொண்டிருக்கிறது.
பணத்துக்கு உரிமைகளைப் பறிகொடுத்த
மந்திரிகளும், எம்பிகளும், மடையர்களும்
அரசிற்கு சாமரை வீசிக் கொண்டிருக்கின்றனர்.
பணத்திற்கு வாக்களித்த நாங்கள்,
கைநாட்டுப் போடும் தலையில்லா,
ஊழல்வாதிகளுக்கும், உதவாக் கரைகளுக்கும்
சலாம் போட்டு, சரணடைந்து விட்டோம்.
எங்கள் உத்திரத்தில் கப்பல் விடும்,
மண்டூகங்களும், குக்கல்களும்
பாதைகளில் நக்கித் திரிகின்றன.
பாவம்...! நாங்கள் கண்களிருந்தும்
கபோதிகளாகி, பிச்சை எடுக்கிறோம்.
நாங்கள் அரைத்து வைத்த சந்தணத்தை
சாராயத்துக்கும், காசிக்கும் களவாக வாங்கி,
சொறிபிடித்த உங்கள் சூத்துக்களில் தடவி,
இரவும், பகலும் கும்மாளமிடும், நீங்கள்
அரசியல் வேசிகளே! அசிங்கங்களே!
எங்கள் பொன்னான வாக்குகளை
புழுக்கைகளுக்கு போட்ட, வெறும்
அறிவில்லா ஆட்டு மந்தைகளே...
படித்தவர்களை மதிக்காமல், பணத்திற்கு
பல்லாக்குத் தூக்கிய முட்டாள்கள் நாங்கள்,
இனத்துவேஷிகளால், நல்லாட்சி தீயில்
இரையாகிப் போகும் போது, எங்களுக்காக
குரல் கொடுக்கும் ஈமான் தாரிகளே
உங்களுக்காக நாங்கள், அல்லாஹ்விடம்
சதா, இரஞ்சிக் கொண்டிருக்கிறோம்.
மக்கள் தலைவனே! உன் ஈமான்
மேலும், மேலும் பலமாகி, நீடூழி வாழட்டும்.
இறைவா! எங்களுக்கு நல்லறிவைத்தா ...
எங்களை ஈமானுள்ள முஸ்லிம்களாக்கி விடு...
 எஸ். முத்துமீரான்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top