ஜனாதிபதி
லண்டனை சென்றடைந்தார்
2018 ஆம் ஆண்டிற்கான
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரிட்டன் சென்ற
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனை சென்றடைந்தார்.
லண்டன் நகரிலுள்ள ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தை இன்று
காலை சென்றடைந்த ஜனாதிபதி, லண்டன் நகரில் தங்கவுள்ள ஹோட்டலில்
அந்நாட்டிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பணிக்குழுவினரால்
ஜனாதிபதிக்கும் அவரது பாரியார் ஜயந்தி சிறிசேனவிற்கும் மகத்தான
வரவேற்பளிக்கப்பட்டது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு லண்டனில் இன்று(16) முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை
இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் பிரிட்டிஷ் பிரதமர்
திரேசா மேயையும் சந்திக்கவுள்ளார்.
மேலும், பொதுநலவாய ஒன்றியத்தின் தலைவர்கள் மாநாட்டில்
கலந்துகொள்ளும் அரச தலைவர்கள் சிலரையும் ஜனாதிபதி இதன்போது சந்திக்கவுள்ளமை
குறிப்பிடத்தகத்கது.
0 comments:
Post a Comment