இம்ரானின்
கட்சி 116
இடங்களில் வெற்றி
அதிகாரப்பூர்வ
அறிவிப்பு
பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முன்னாள்
கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ
அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 25-ம் திகதி பாராளுமன்றத்தின் 272 தொகுதிகளுக்கும், 4 மாகாணங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. அந்த
தேர்தலில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சுமார் 115 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல்
திணைக்களம் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தேர்தல் முடிவுகளை நவாஸ் ஷரிப்பின் பாகிஸ்தான்
முஸ்லிம் லீக் கட்சி உட்பட சில எதிர்க்கட்சிகள் ஏற்க மறுப்பு தெரிவித்து
வருகின்றன. தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்
சாட்டியுள்ளன. அதே சமயம் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை என பாகிஸ்தான் தேர்தல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகளை அதிகாரப்பூர்வமாக பாகிஸ்தான்
தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதில் 272 தொகுதிகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ
இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
66 தொகுதிகளில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப்பின்
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இத்துடன் மாகாண தேர்தலின்
முடிவுகளை அறிவித்துள்ள தேர்தல் திணைக்களம், பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 129 தொகுதிகளில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி
வெற்றி பெற்றுள்ளது. சிந்து மாகாணத்தில் 76 தொகுதிகளில் பாகிஸ்தான் மக்கள் கட்சியும்,
கைபர் பக்துன்க்வா
மாகாணத்தில் 66 தொகுதிகளில்
தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும், பலோசிஸ்தான் மாகாணத்தில் 15 தொகுதிகளில் அவாமி கட்சி வெற்றி பெற்றுள்ளதாகவும் பாகிஸ்தான் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment