பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான்
ஆகஸ்ட் 11ல் பதவியேற்பு
பாகிஸ்தான்
பிரதமராக ஆகஸ்ட்
11ம் திகதி
இம்ரான்கான் பதவி ஏற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத்
தேர்தலில் 116 இடங்களில் இம்ரான்கட்சி வெற்றி பெற்றது.
பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவைப்படும்
நிலையில், சுயேட்சைகள்
ஆதரவோடு இம்ரான்கான்
ஆட்சி
அமைக்கிறார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு கடந்த
25-ம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 116 தொகுதிகளில் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி 64 தொகுதிகளிலும், மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதர காட்சிகள் 20 இடங்களிலும், 14 தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.
0 comments:
Post a Comment