மஹிந்தவை காப்பாற்றிய அர்ஜூன் மகேந்திரன்?
வெளிவந்த புதிய தகவல்
சிங்கள இணையத்தளம் தெரிவிப்பு



இலங்கை மத்திய வங்கியின் கிளை ஒன்றில் நான்கு நடைமுறை கணக்குகளில் வழங்கப்பட்ட 5 காசோலைகள் மூலம் 11 கோடியே 50 லட்சம் ரூபாவை ஒரே நபர் பெற்றுக்கொண்டமை குறித்து இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு நடத்திய விசாரணைகள் அன்றைய மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் உத்தரவின் பேரில் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரையான அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருந்த நேரத்தில் இந்த காசோலைகள் மாற்றப்பட்டுள்ளன.
ருக்மலே பிரதேசத்தை சேர்ந்த டி.எம்.எஸ். திஸாநாயக்க என்பவர் இந்த காசோலைகளை மாற்றி பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நபரை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த போது தனது பணிகளில் ஈடுபடுத்தி வந்ததுடன் அலரி மாளிகை ஊழியர்கள் குழுவில் இணைந்து பணியாற்றி வந்துள்ளார்.
0000001062, 0072978269, 0000001368 ஆகிய நடைமுறை கணக்குகளில் 5 காசோலைகள் வழங்கப்பட்டிருந்தன.
272759 என்ற இலக்க காசோலையின் மூலம் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாவும் 723605 என்ற இலக்க காசோலை மூலம் இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாவும் 279595 என்ற இலக்க காசோலை மூலம் இரண்டு கோடியே 50 ரூபாவும் 248370 என்ற இலக்க காசோலை மூலம் மூன்று கோடி ரூபாவும் செலுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விசாரணைகளை ஆரம்பித்தது.
 இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதமளவில் அன்றைய மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் அழுத்தங்கள் காரணமாக இந்த விசாரணைகள் இடையில் நிறுத்தப்பட்டுள்ளன.
11 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் மாற்றப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு தொடர்பு இருக்கின்றது என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அந்த விசாரணைகளை நிறுத்துமாறு அர்ஜூன் மகேந்திரன் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும் என சிங்கள இணையத்தளம் ஒன்று கூறியுள்ளது

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top