அமைச்சரவையின் அனுமதியுடன்
16 கோடி 20 இலட்சம் ரூபா நிதி
ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும்
மக்கள் சூழ்ந்து வாழும் பிரதேசத்திலுள்ள
சாய்ந்தமருது தோணாவின் இன்றைய அவல நிலை

சாய்ந்தமருது மக்களுக்காக தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதியுடன் 16 கோடி 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் வாழும் பகுதியில் உள்ள தோணா பகுதி எவ்வித அபிவிருத்தியும் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டிருக்கிறது.
தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்யவேண்டும் என அமைச்சரவைக்கு பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டே தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.
ஏற்கனவே, 3 கோடி ரூபா செலவில் தோணா அபிவிருத்தி என்று கூறி அங்குள்ள புல் பூண்டுகளை அகற்றினார்கள். அத்தோடு அங்கு அபிவிருத்தி வேலைகள் நின்றுவிட்டன. அந்தபெருந்தொகையான நிதி தோணாவுக்குள் அமிழ்ந்து போனதா? அல்லது அதற்கு என்ன நடந்தது? என்று இன்று வரையும் யாராலும் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதுபோன்று இதற்கு முன்னரும் கல்முனை மாநகர சபையும் சுமார் 12 இலட்சத்திற்கும் அதிகமான தொகையை தோணா அபிவிருத்தி என்று கூறி புல் பூண்டுகளை அகற்றி செலவிட்டது.
இந்நிலையில்தான் தோணாவின் இயற்கை தன்மையினை பாதுகாக்கும் வகையில் தோணாவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தோணாவை சூழவசிக்கும் 2700 குடும்பங்களிலுள்ள 10,000க்கும் அதிகமான பொதுமக்களினை வெள்ளப்பெருக்கு மற்றும் கலப்பு அரிப்பினால் பாதுகாக்கும் நோக்கில் 162 மில்லியன் ரூபா மதிப்பீட்டு செலவில் தோணாவை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
சாய்ந்தமருது மக்களுக்காக அமைச்சரவையின் அனுமதியுடன் ஒதுக்கப்பட்டுள்ள பெரும் தொகைப் பணமும் கடந்த காலத்தைப் போன்று அபிவிருத்திக்கு செலவிடாமல் செலவு செய்ததாகக் கூறி வேறு இடங்களில் புதைந்து விடக்கூடாது என்பது இப்பிரதேச மக்களின் விருப்பமாகும்.
சாய்ந்தமருது மக்களின் நலனுக்காக அமைச்சரவையின் அனுமதியுடன் ஒதுக்கப்பட்டுள்ள  16 கோடி 20 இலட்சம் ரூபா நிதி முழுமையாகப் பாவிக்கப்பட்டுவிட்டதா? பாவிக்கப்படவில்லையானால் இன்றுவரை எவ்வளவு தொகை பாவிக்கப்பட்டுள்ளது? மீதி எவ்வளவு தொகை உள்ளது? தோணாவில் செய்யப்படவேண்டிய வேலைத் திட்டங்கள் என்ன? என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர்.
இதோ மக்கள் சூழ்ந்து வாழும் பிரதேசத்திலுள்ள தோணாவின் இன்றைய அவல நிலை,






Residents in Sainthamaruthu Divisional Secretary's Division in Ampara District are affected by the floods in the lagoon annually. Absence of proper drains, some aquatic plants obstructing the flow of water, and waste disposal around the lagoon by residents have caused this situation. Accordingly, the proposal made by City Planning and Water Supply Minister Rauff Hakeem to construct a barrier around the lagoon at an estimated cost of Rs. 162 million as a measure to these issues benefiting more than 10,000 people of 2,700 families, was approved by the Cabinet of Ministers.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top