அமெரிக்காவின்
ஜனாதிபதி
டிரம்பை
பெருமைப்படுத்தும்
வகையில் பதிக்கப்பட்டிருந்த
நட்சத்திர
வடிவம் சேதம்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீசில் உள்ள ஹாலிவுட்டில் ஜனாதிபதி டிரம்பை பெருமைப்படுத்தும் வகையில்
பதிக்கப்பட்டிருந்த ('Hollywood Walk of Fame') என்ற சிறப்பு நட்சத்திர வடிவம் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
பிரபலங்களை கெளரவப்படுத்தும் வகையில் ஐந்து இதழ்கள் கொண்ட
இளஞ்சிவப்பு நட்சத்திரங்களுக்கு நடுவில் பித்தளை எழுத்துகளில் பெயர் வடிக்கப்பட்டு
ஹாலிவுட் அரண் சாலையை ஒட்டிய நடைமேடையில் பதிக்கப்படுகின்றன.
இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பை கெளரவப்படுத்தி
பதிக்கப்பட்டிருந்த சிறப்பு நட்சத்திர வடிவம் சேதப்படுத்தப்பட்டது. சேதப்படுத்திய 24
வயது இளைஞரான ஆஸ்டின்
கிளே என்பவர் காவல்துறையில் சரணடைந்துள்ளார். பின்னர் அவரை கைது செய்த பொலிஸார்,
ஜாமீனில் விடுவித்தனர்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.