22
ஆண்டுக்கால போராட்டம்,
பிரார்த்தனைக்கு
அல்லாஹ் செவிசாய்த்துள்ளான்:
இம்ரான்கான்
பேட்டி
22 ஆண்டுக்கால போராட்டம், பிரார்த்தனைக்கு அல்லாஹ் செவிசாய்த்துள்ளதற்கு
நன்றி என பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் பலத்த பாதுகாப்புடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 4 மாகாண சட்டசபை உறுப்பினர்களை
தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. நாடு முழுவதும் 85 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் மக்கள்
வாக்களித்தனர். இதனையடுத்து நேற்று இரவு 8 மணி முதல் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இந்நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள்
கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இம்ரான் கான்
போட்டியிட்ட கராச்சி தொகுதியில் வெற்றி பெற்றார். இம்ரான் கானின் தெஹ்ரிக் இன்சாப்
கட்சி 114 இடங்களில்
முன்னிலை பெற்றுள்ளது. மொத்தமுள்ள 272 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 137 இடங்கள் தேவை. இதனையடுத்து மற்ற சிறிய
கட்சிகளின் ஆதரவை பெற்று இம்ரான் கான் ஆட்சி அமைக்க உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
இந்நிலையில் பேட்டியளித்த இம்ரான்கான், தனது கனவுகளை நனவாக்க, நாட்டுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது
என்றும் பாகிஸ்தானில் ஜனநாயகம் பலம்பெற்றுவருவதை தாம் பார்த்து வருவதாக இம்ரான்
கூறியுள்ளார்.
தீவிரவாத தாக்குதலுக்கு நடுவே தேர்தல் வெற்றிகரமாக நடந்து
முடிந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை நடத்தி முடித்ததற்காக பாதுகாப்புப்
படையினருக்கு இம்ரான்கான் நன்றி தெரிவித்துள்ளார். வறுமை ஒழிப்புதான் பாகிஸ்தான்
முன் உள்ள மிகப்பெரும் சவால் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment