சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
22ஆவது
வருடாந்த மாநாடும் பொதுக்கூட்டமும் கௌரவிப்பும்
சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.
குறித்த கூட்டம் கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் தலைவர் எஎம்.அமீன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில், அமைச்சர் ஹபீர் காசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹிம், தஹ்லான் மன்சூர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன், நீண்டகாலம் ஊடகத்துறையில் பங்களிப்புச் செய்தமைக்காக தயா லங்காபுர, ரி.ஞானசேகரன், எம்.இஸட்.அஹமட் முனவ்வர், எம்.ஐ.எம்.சம்சுதீன், மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஹம்ஸா ஹனீபா, ஸக்கிய பரீட் ஆகியோரும் கௌரவிக்கபட்டனர்.
0 comments:
Post a Comment