கல்முனை பிரதேசமும், இங்கு வாழும் மக்களும்
கறிவேப்பிலையாகப் பயன்படுத்தப்பட்டு
ஏமாற்றப்படுகின்றார்களா?
கல்முனையில் இப்படியான
அபிவிருத்திகளைக் காணமுடியாதா?
வெளி
மாவட்டங்களில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை
தந்திரமாகச் செய்து காய்நகர்த்தும் முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கல்முனை பிரதேசமும் இங்கு வாழும் மக்களும் எக்கேடு கெட்டுப்போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் கல்முனை
அபிவிருத்தி என்ற பெயரில் கொழும்பிலும், கல்முனையிலும் கூட்டங்களை மட்டும் கூட்டி
மில்லியன், பில்லியன் என்றும் துபாய், அபுதாபி, பஹ்ரைன் மாதிரி என்றும்
கதைவிட்டுக்கொண்டிருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதோ, புதிதாக
நிர்மாணிக்கப்பட்ட ஏறாவூர் பிரதேச
செயலகத்தின் மூன்று மாடி கட்டிடத்தை பிரதமர்
ரணில் விக்கிரமசிங்க
நேற்று (29) திறந்துவைத்தார்.
இந்நிகழ்வில்
முஸ்லிம் காங்கிரஸ்
தலைவர் அமைச்சர்
ரவூப் ஹக்கீம்,
பிரதியமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மெளலானா,
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல். நஸீர்,
ஏறாவூர் நகர
சபையின் தலைவர்
வாஸித், முன்னாள்
முதலமைச்சர் நஸீர் அஹமட் உள்ளிட்டோர் அதிதிகளாக
கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment