பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர்
ஆகஸ்ட் மாதம் விடுமுறைக்கு பின்
பாடசாலை
மாணவர்களுக்கு அடுத்த வருடத்திற்கான சீருடையை வழங்குவதற்கு
தேவையான வவுச்சர்
மூலமான பணம்
ஆகஸ்ட் மாதம்
விடுமுறைக்கு பின்னர் வழங்கப்படும் என்று கல்வி
அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்குத்
தேவையான ஆரம்ப
நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக
இராஜாங்க செயலாளர்
திஸ்ஸ ஹேவாவிதாரண
தெரிவித்தார்.
43 இலட்சம்
பாடசாலை மாணவர்களுக்கும்,
பிரிவெனாக்காளில் கல்வி பயில்வோருக்கும் தேவையான துணி
வகைகளுக்கும் தேவையான பண வவுச்சர் மூலம்
பெற்றுக் கொள்ள
முடியும்.
கடந்த
முறையைப் போன்று
இம்முறையும் இந்த வவுச்சர் நடைமுறை முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும்
இராஜாங்க செயலாளர்
குறிப்பிட்டார்.
இதற்குத்
தேவையான நிதி
அரசாங்கத்தினால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்
ஒருவருக்கு ஒதுக்கப்படும் நிதி சுயாதீனக் குழு
மூலம் தீர்மாதனிக்கப்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment