“காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க
இந்தியா ஒரு அடி முன்வந்தால்,
பாகிஸ்தான் இருஅடி முன்னோக்கி நகரும்”
இம்ரான்கான் பேட்டி
இம்ரான் கான் ஊடகங்களுக்கு பேட்டிஅளி்த காட்சி |
காஷ்மீர்
பிரச்சினையை சுமூகமாக, பேச்சு வார்த்தை மூலம்
தீர்க்க இந்தியா
தரப்பில் ஒரு
அடி முன்னோக்கி
நகர்ந்தால், நாங்கள் இரு அடிகள் முன்னோக்கி
வருவோம் என்று
பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ)
கட்சியின் தலைவரும்,
பிரதமராகப் பதவி ஏற்க இருப்பவருமான இம்ரான்
கான் தெரிவித்தார்.
பாகிஸ்தானில்
உள்ள 272 தொகுதிகளுக்கும்
நேற்று நாடாளுமன்றத்
தேர்தல் நடந்து,
வாக்குகள் எண்ணப்பட்டு
வருகின்றன. இந்தத் தேர்தலில் 30-க்கும் மேற்பட்ட
கட்சிகள் போட்டியிட்டன.
வாக்குகள்
எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில்,
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க
ஒரு கட்சிக்கு
137 இடங்கள் தேவை. அந்தவகையில் முன்னாள் கிரிக்கெட்
வீரரான இம்ரான்
கானின் பிடிஐ
கட்சி 119 இடங்கள்
பெற்று முன்னணியில்
இருந்து வருகிறது.
2-வது
இடத்தில் முன்னாள்
பிரதமர் நவாஸ்
ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ்
கட்சி 64 இடங்களிலும்,
பிலாவல் பூட்டோவின்
பிபிபி கட்சி
43 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள்
14 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இந்நிலையில் அடுத்த
சில மணிநேரங்களில்
பாகிஸ்தானில் தனிப்பெரும்பான்மையுடன் யார்
ஆட்சி அமைப்பார்
அல்லது கூட்டணியுடன்
ஆட்சி அமையுமா
என்பது தெரிந்துவிடும்.
பாகிஸ்தானைப்
பொருத்தவரை மொத்தம் 342 இடங்கள் உள்ளன. இதில்
272 தொகுதிகளுக்கு மட்டுமே நேரடியாகத்
தேர்தல் நடக்கும்.
மீதமுள்ள 72 தொகுதிகளில் 60 தொகுதிகள் பெண்களுக்கும், 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும்
ஒதுக்கப்படும்.
இதில்
272 தொகுதிகளில் பஞ்சாப் மாநிலத்தில் 141 தொகுதிகளும், சிந்து
மாநிலத்தில் 61 தொகுதிகளும், கைபர் பக்துன்கவா, பலூசிஸ்தானில்
39 தொகுதிகளும் அடங்கும். மேலும், பழங்குயிடினர் வசிக்கும்
2 பகுதிகளுக்கு 12 தொகுதிகளும், இஸ்லாமாபாத்
தலைநகருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்படும்.
மாலை
நிலவரப்படி 118 இடங்களில் வெற்றி பெற்று அடுத்த
பிரதமராக பாகிஸ்தான்
தெஹ்ரிக் இ
இன்சாப் கட்சியின்
தலைவராக இம்ரான்
கான் பொறுப்பேற்க
உள்ளார். இம்ரான்
கானுக்கு இதுவரை
வழங்கப்பட்ட தனியார் பாதுகாப்பு விலக்கப்பட்டு, அவருக்கு
உயர்மட்ட பாதுகாப்பு
வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில்
கிடைத்த வெற்றியையடுத்து,
ஊடகங்களுக்கு இம்ரான் கான் பேட்டி அளித்தார்.
அப்போது அவர்
கூறியதாவது:
நான்
முதலில் என்னைப் படைத்த அல்லாஹ்வுக்கு நன்றியைத் தெரிவிக்கிறேன்.
எனது 22 ஆண்டுக்கால
உழைப்புக்குப் பலன் கிடைத்துவிட்டது. பாகிஸ்தான் குறித்து
எனக்குக் கனவு
இருந்தது. அந்த
கனவை நிறைவேற்ற அல்லாஹ் எனக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறான்.
கடந்த
1996-ம் ஆண்டு
நான் கட்சி
தொடங்கினேன். எனக்கு மிகப்பெரிய ஆதரவு அளித்த
பாகிஸ்தான் மக்களுக்கு இந்த நேரத்தில் நன்றியைத்
தெரிவிக்கிறேன். இந்த நாட்டுக்காகச் சேவை செய்ய
மக்கள் எனக்கு
வாய்ப்பு கொடுத்து
இருக்கிறார்கள்.
அனைத்து
விதமான அச்சுறுத்தல்கள்,
வன்முறைகள் ஆகியவற்றைக் கடந்து எனக்கு வாக்களித்த
பலூசிஸ்தான் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். பாகிஸ்தானின் ஜனநாயகம்
வலிமையடைய மக்கள்
வெற்றிகரமாக வாக்களித்து இருக்கிறார்கள்.
சீனாவுக்குப் புகழ்ச்சி
அதிகரித்து
வரும் வறுமையைக்
கட்டுப்படுத்த வேண்டும், சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும்
என்பது எனது
கனவாக இருந்தது.
ஒருநாட்டில்
உயர்குடிமக்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை வைத்து
ஒரு நாடு
மதிப்பீடு செய்யப்படுவதில்லை.
ஏழை மக்களை
எவ்வாறு நடத்துகிறோம்,
அவர்களின் வாழ்க்கை
முன்னேற்றத்துக்கு என்ன திட்டங்களை
வகுக்கிறோம் என்பதில்தான் ஒரு நாட்டை மற்ற
நாடுகள் மதிப்பீடு
செய்யும்.
உதாரணமாகச்
சீனா, நம்
கண்முன்னே 70 கோடி மக்களை ஏழ்மையில் இருந்து
மீட்டது. சீனாவில்
வறுமை எவ்வாறு
ஒழிக்கப்பட்டது என்பதை அறியச் சிறப்பு குழுவை
அனுப்புவோம். 2-வதாக சீனாவில் ஊழல், லஞ்சம்
கட்டப்படுத்தப்பட்டது என்பதை அறிந்து
கொள்வோம். சீனாவுடன்
எங்கள் உறவை
வலுப்படுத்தி, முன்னேற்றுவோம். சீனா, பாகிஸ்தான் பொருளாதார
காரிடரை நோக்கி
நாங்கள் செயல்படுவோம்.
.
வறுமையில்
வாடும் எங்கள்
குழந்தைகளுக்கு நாங்கள் பல வாய்ப்புகளைக் கொடுக்கவில்லை.
2.5 கோடி குழந்தைகள்
பள்ளிக்கல்வி இல்லாமல் என்னுடைய நாட்டில் இருக்கிறார்கள்.
தென்கிழக்கு
ஆசியாவில் வறுமையை
நீக்க பாகிஸ்தான்
முயல்கிறது. அதேசமயம், எங்கள் நாட்டையும் கட்டமைக்க
பாடுபடுவோம். இந்தியாவும், பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர்
குறைகூறுவதை தவிர்த்து விட்டு, இருதரப்பு உறவில்
முன்னேற்றத்தை நோக்கி நகர வேண்டும்.
காஷ்மீர் விவகாரம்
எங்களுக்கு
காஷ்மீர் விவகாரம்
மிக முக்கியமானதாகும்.
காஷ்மீரில் கடந்த 30 ஆண்டுகளாக மனித உரிமை
மீறல்கள் நடந்து
வருகின்றன. ராணுவத்தினர் எப்போதெல்லாம்
மக்கள் வசிக்கும்
பகுதிக்குள் செல்கிறார்களோ அப்போதெல்லாம்
மனித உரிமை
மீறல்கள் நடக்கின்றன.
காஷ்மீர் மக்கள்
பெருமளவு பாதிக்கப்பட்டுவிட்டார்கள்.
காஷ்மீரில்
எந்தவிதான சம்பவங்கள்
நடந்தாலும், அது பாகிஸ்தான் மூலமாகத்தான் நடந்ததாக
இந்தியா நினைக்கிறது.
ஆனால், பலுசிஸ்தானில்
என்ன நடந்தாலும்,
இந்தியாவால்தான் நடக்கிறது என்று நாங்கள் நினைக்கிறோம்.
இதனால், ஒருதரப்பான
உறவு மட்டுமே
நீடிக்கிறது.
காஷ்மீர்
விவகாரத்தில் நாங்கள் பேச்சு நடத்த தயாராக
இருக்கிறோம். காஷ்மீர் பிரச்சினையை சமூகமாக, பேச்சுவார்த்தை
மூலம் தீர்க்க
இந்தியா ஒருஅடி
முன்னோக்கி எடுத்துவைத்தால், நாங்கள் இரு அடிகள்
முன்னோக்கி வருவோம். முக்கியப் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை
மூலமே தீர்க்க
முயல்கிறோம்.
ஆனால்,
இந்தியாவில் பாலிவுட்டில் என்னை வில்லன் போல்
சித்தரிக்கிறார்கள். இந்திய ஊடகங்கள்
கடந்த சில
வாரங்களாக என்னைப்
பற்றி செய்தி
வெளியிட்டது எனக்கு வேதனையளிக்கிறது. இந்தியாவில் கிரிக்கெட்
விளையாட பாகிஸ்தானில்
இருந்து வந்த
வீரர் என்பதை
மறந்து வில்லனாக
சித்தரிக்கிறார்கள். இவ்வாறு இம்ரான்
கான் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment