கிழக்கில் சுற்றுலா விமான சேவைகளை
ஆரம்பிக்கவுள்ளதாக
பிரதமர் ரணில் விக்ரமசிங்க
தெரிவிப்பு
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் இரண்டு மாடி கட்டடத்தின் திறப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது கட்டடத்தை திறந்து வைத்து கருத்து தெரிவித்த போதே பிரதமர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணம் யுத்தத்திற்கு முகங்கொடுத்த பிரதேசம் என்பதனால் அதனை பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்ய மாற்று திட்டங்கள் உள்ளன.
இதற்கமைய சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வது தொடர்பாக கடந்த தினங்களில் கலந்துரையாடப்பட்டது. சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய போக்குவரத்தே பிரச்சினையாக உள்ளது.
எனவே, கிழக்கில் சுற்றுலா விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின் சுற்றுலாத்துறை ஊடாக பலருக்கு வாழ்வாதாரம் மேம்படும்.
இதேநேரம், மத்தள விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதும் கிழக்கிற்கு சாதகமாக அமையும். இதனூடாக சுற்றுலாத்துறையை மேலும் பலப்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment