கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட

விபுலானந்த நுண்கலை கல்லூரியில் புதிய கற்கைநெறிகளுக்காக

335 மில்லியன் ரூபா செலவிட அரசு திட்டம்


கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுவாமி விபுலானந்த நுண்கலைகல்வி நிறுவனத்தின் வசதிகளை விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அமைச்சரவை  தீர்மானங்ளை  அறிவிக்கும் செய்தியாளர்  மகாநாடு  இன்று காலை  அரசாங்க  தகவல்  திணைக்களத்தில்  நடைபெற்றது.
இதன் போது  சுகாதார  போஷாக்கு  மற்றும்  சுதேச  வைத்திய துறை அமைச்சரும்  அமைச்சரவை  துணைபேச்சாளருமான  டொக்டர்  ராஜித சேனாரத்ன  இது  தொடர்பாக  தெரிவிக்கையில்,
இலங்கை  கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு  உட்பட்ட  சுவாமி  விபுலானந்த நுண்கலை  கல்வி  நிறுவனம்  இசை  மற்றும்  நடனம்  ஆகிய  கற்கை நெறிகளுக்கு  மேலதிகமாக  நடிப்புக் கலை  மற்றும்  சிற்பக்கலை  முதலான கற்கை  நெறிகளை  தொடர  கூடிய  வகையில்  இதன்  கல்வி  நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால்  இந்த  நிறுவனம்  கொண்டுள்ள  வசதிகள்  தற்போதைய  கற்கை நெறிகளுக்கு  தற்போதைய  போதுமானதல்ல  என்று  தெரிவித்தார்.
இதனால்  பொருத்தமான  வகையில்  வசதிகளை  மேம்படுத்துவதற்கான தேவையும்  அடையாளம்  காணப்பட்டுள்ளது.  இதற்கமைவாக  சுவாமி விபுலானந்த நுண்கலை  கல்வி நிறுவனத்தை-நவீனமயப்படுத்துவதற்கும் காணொளி பதிவுகளை மேற்கொள்வதற்கும் தொகுப்புக்கான வசதிகளைக் கொண்டதான கட்டிடதொகுதி ஒன்றை நிர்மாணிப்பதற்கும் அதற்கு தேவையான ஏனைய வசதிகளை பெற்றுக்கொடுத்து அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

இதற்கான திட்டம் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியாக கிடைக்கும் 275மில்லியன் ரூபா மற்றும் அரசாங்கத்தின் 60.7 மில்லியன் ரூபாவை கொண்ட மொத்த முதலீட்டின் கீழ் நடைமுறைபடுத்துவதற்காக உயர்கல்வி மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி)விஜயதாச ராஜபக்ஸ சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top