அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு
ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி காலை உஹனயில்
விவசாய அமைச்சர் தலைமையில் ஆரம்பம்


இம்முறை சிறு போக்கத்தில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டதுடன் உடனடியாக அவற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை  மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நெல் சந்தைப்படுத்தல்  சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் 2018ம் ஆண்டுக்கான  சிறுபோக நெல் அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வதற்கான பணிகள் முதலாவதாக மேற்கொள்ள நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளதாக சபையில் தலைவர் சட்டத்தரணி  உபாலி மோஹோட்டி தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக  இந்த மாவட்டத்தில் நெல் கொள்வனவு பணிகள் ஆகஸ்ட் மாதம் 4ம் திகதி காலை 10மணிக்கு அம்பாறை மாவட்டத்தின் உஹனயில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான நிகழ்வு விவசாய அமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ளது. இம்முறை சிறுபோகத்தில் சுமார் 4 இலட்சம் வயல்களில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.4 மில்லியன் மெற்றிக் டொன் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாக  விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
இம்முறை 120,000 மெற்றிக் டொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்பார்த்துள்ளது. இதற்கு தேவையான 4900 மில்லியன்  நிதி அமைச்சில் மஹிந்த அமரவீரவின் கோரிக்கைக்கு அமைய ஒதுக்கீடு செய்துள்ளது.
விவசாயிகளிடம் இருந்து கொள்வனவு செய்யும் நெல்லின் மூலம் தயாரிக்கப்படும் அரிசி PMB Rice என்ற விற்பனை நாமத்துடன் சதோச அடங்கலாக சந்தைக்கு  விலை சலுகையுடன் பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பொதுமக்களால் இலகுவாக அரிசியை பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாட்டை நெல் சபை முதல் முறையாக மேற்கொண்டுள்மை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top