உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது
- நடிகர் விஜய் பெயர் பரிந்துரை
`மெர்சல்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது.
விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது.
இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.