முஸ்லிம்களின்
ஹஜ் கடமைக்காக
கஃபாவின் கிஸ்வா துணி
மூன்று மீற்றர் அளவுக்கு உயர்த்தப்பட்டது
முஸ்லிம்களின்
ஹஜ் கடமையை
ஒட்டி மக்காவில்
உள்ள புனித
கஃபாவை போர்த்தி
இருக்கும் கிஸ்வா
துணி சுமார்
மூன்று மீற்றர்
அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
சவூதி
அரேபியாவின் பெரிய பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுன்
நபவி பள்ளிவாசல்
விவகாரங்களுக்கான பொதுத் தலைமை இவ்வாறு கிஸ்வா
துணியை உயர்த்தி
அதன் நான்கு
பக்கங்களிலும் சுமார் இரண்டு மீற்றர் அகலத்திற்கு
வெள்ளை பருத்தித்
துணியால் மூடியுள்ளது.
2018 ஹஜ் பருவத்தை ஒட்டி பொதுத்
தலைமை இந்த
நடவடிக்கையை எடுப்பதாகவும் கஃபாவின் கிஸ்வாவை மாற்றும்
வழக்கமான செயல்முறையை
முன்னெடுத்திருப்பதாகவும் கஃபாவுக்கான மன்னர் அப்துல் அஸிஸ்
வளாகத்தின் பொது இயக்குனர் அஹமது பின்
முஹமது அல்
மன்சூரி குறிப்பிட்டுள்ளார்.
கிஸ்வாவின் தூய்மை மற்றும் பாதுகாப்பிற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
கிஸ்வா
துணி சேதமாவதை
தடுப்பதற்காகவே அது நிலத்தில் இருந்து மூன்று
மீற்றர்கள் உயர்த்தப்பட்டு பதிலாக வெள்ளை துணியால்
மறைக்கப்படுவதாக குறிப்பிட்ட மன்சூரி, இது ஹஜ்
காலத்தில் மாத்திரமே
செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.






0 comments:
Post a Comment