வியட்நாமில் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்த
கலை நயமிக்க தங்க பாலம்
வியட்நாமில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள பாலம் சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது. வியட்நாமின் பா நா மலைப்பகுதியில் இயற்கை எழிலை சூற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் இப்பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கவ் வாங் என பெயரிடப்பட்டுள்ள இப்பாலம் கடந்த ஜூன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.
சுமார் 150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் கடல் மட்டத்தில் இருந்து 1,400 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கற்களால் செதுக்கப்பட்ட இரண்டு கைகளில் பாலம் தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய கலைநயமிக்க பாலத்தை கட்டிய கட்டிடக்கலை நிபுணர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இப்பாலம் திறக்கப்பட்டதையடுத்து அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.
இயற்கையை ரசிக்கும் வகையில் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தை கட்டிமுடிக்க சுமார் 2 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. பாலம் முழுவதும் தங்க நிற பெயிண்டுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதால் இதனை தங்க பாலம் என்று அழைக்கின்றனர். இப்பாலத்தின் வழிநெடுகிலும் வண்ண மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment