நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் இன்று
வெற்றுக் கண்களால் பார்க்கலாம்; பாதிப்பில்லை
இந்த
நூற்றாண்டின் மிகப் பெரிய முழு
சந்திர கிரகணம் இன்று (27) இடம்பெறவுள்ளது.
இரவு
11.54 மணிக்கு ஆரம்பமாகும் இச்சந்திர கிரகணம், நள்ளிரவு கடந்து அடுத்த நாள்
(28) சனிக்கிழமை அதிகாலை 1.00 மணிக்கு முழு சந்திர
கிரகணமாக மாற்றமடைந்து, அதிகாலை 2.43 மணிக்கு முடிவடையும்.
அதனைத்
தொடர்ந்து, பகுதி சந்திர கிரகணம்
அதிகாலை 3.49 மணிக்கு முடிவடைகிறது.
இந்த
முழு சந்திர கிரகணம் மொத்தமாக
102 நிமிடங்கள் இடம்பெறவுள்ளது.
இதுபோன்ற
நீண்ட முழு சந்திர கிரகணம்
அடுத்ததாக 2029 ஜூலை 25 ஆம் திகதி
நிகழவுள்ளதோடு, அது 108 நிமிடங்கள் வரை
நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
அரிய சந்திரகிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம்
என்பதோடு இதனால் எவ்வித தீங்கும்
ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை,
13 ஆண்டுகளுக்குப் பின்னர் செவ்வாய் கோள்,
பூமிக்கு மிக அருகில் வரும்
நிகழ்வும் இன்று வெள்ளிக்கிழமை
இடம்பெறுகின்றது. இதன் காரணமாக ஜூலை
25 முதல் - 31 ஆம் திகதி வரை
பூமியின் அருகே செவ்வாய் நெருங்கி
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அப்போது,
பூமிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட இடைவெளி 5.76 கோடி கிலோ மீட்டராக
இருக்கும். நீள்வட்டப் பாதையில் சுற்றும் செவ்வாய் கோள் மிகுந்த தொலைவுக்குச்
செல்லும்போது 38 கோடி கிலோ மீட்டர்
தொலைவில் அமைந்திருக்கும்.
சூரியனுக்கு
நேர் எதிரே 180 பாதை கோணத்தில் ஒரு
கோள் வரும்போது, அந்தக் கோள் எதிரமைவு
கொண்டுள்ளது எனக் கூறப்படுகிறது.
அந்த
எதிரமைவின்போது, அந்தக் கோளானது பூமிக்கு
மிக அருகில் வருவதோடு, பெரிதாகவும்,
ஒளியுடனும் காணப்படும். மேலும், சூரியன் மறையும்போது
உதயமாகி, இரவு முழுவதும் வானில்
காணப்படும். இந்த நேரத்தில் அந்தக்
கோள் குறித்தான ஆராய்ச்சியையும் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment