ஆசியக் கிண்ணம் 2018
பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும்
செப்டம்பர் 19ம் திகதி மோதுகின்றன



ஆசிய கிண்ணம் 2018க்கான அட்டவணையை .சி.சி. நேற்று இரவு வெளியிட்டது. அதில் செப்டம்பர் 19ம் திகதி பரம எதிரிகளான இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுகின்றன.
இந்த ஆண்டுக்கான ஆசிய கிண்ணம் கிரிக்கெட் போட்டிகள் செப்டம்பர் மாதம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை .சி.சி. நேற்று இரவு வெளியிட்டுள்ளது.
இதில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. இதில் பிரிவில் இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பிடித்துள்ளன.
முதல் போட்டி செப்டம்பர் 15-ம் திகதி நடைபெறுகிறது. இதில் இலங்கையும் வங்காளதேசமும் மோதுகின்றன. இந்தியா தனது பரம எதிரியான பாகிஸ்தானுடன் செப்டம்பர் 19-ம் திகதி மோதுகிறது.  
இரு பிரிவிலும் முதல் இரு இடங்கள் பெறும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். அவற்றில் இருந்து இரு அணிகள் இறுதி சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். இறுதி போட்டி செப்டம்பர் 28-ம் திகதி துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Asia Cup 2018 full schedule

Group Stage
15 September - Bangladesh vs Sri Lanka (Dubai)
16 September - Pakistan vs Qualifier (Dubai)
17 September - Sri Lanka vs Afghanistan (Abu Dhabi)
18 September - India vs Qualifier (Dubai)
19 September - India vs Pakistan (Dubai)
20 September - Bangladesh vs Afghanistan (Abu Dhabi)

Super Four
21 September - Group A Winner vs Group B Runner-up (Dubai)
21 September - Group B Winner vs Group A Runner-up (Abu Dhabi)
23 September - Group A Winner vs Group A Runner-up (Dubai)
23 September - Group B Winner vs Group B Runner-up (Abu Dhabi)
25 September - Group A Winner vs Group B Winner (Dubai)
26 September - Group A Runner-up vs Group B Runner-up (Abu Dhabi)

Final
28 September - Asia Cup 2018 Final (Dubai)
.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top