அனந்தியின் கைத்துப்பாக்கி விவகாரம்:
வெளியானது கோரிக்கை கடிதம்
தற்போது
வடக்கு அரசியலில் பேசும்பொருளாக மாறியிருப்பது வடமாகாண மகளிர் விவகார
அமைச்சர் அனந்தி சசிதரனிடம் கைத்துப்பாக்கி
உள்ளதாக தெரிவிக்கப்படும் விடயம்.
வடமாகாண
சபையின் கடந்த 127வது விசேட அமர்வின்
போது, ஆளும் கட்சி உறுப்பினர்
அஸ்மின் அயூப் வடமாகாண மகளிர்
விவகார அமைச்சர் துப்பாக்கி வைத்திருக்கின்றார் என்ற கருத்தினை வெளியிட்டமை
தொடர்பில் பல சர்ச்சைகள் இடம்பெற்று
வந்தன.
எனினும்
அதற்கு வடமாகாண மகளிர் விவகார
அமைச்சர் அனந்தி சசிதரன் மறுப்பு
தெரிவித்திருந்ததுடன், அந்த விடயம் தொடர்பாக
தன்னிலை விளக்கம் ஒன்றையும் நேற்றைய தினம் மாகாண
சபை அமர்வின்போது வெளியிட்டிருந்தார்.
இருப்பினும்
தற்போது பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றை பெற்றுக்கொள்வதற்கு அனந்தி
சசிதரன் விண்ணப்பித்துள்ள கோரிக்கை கடிதம் ஒன்று. ஊடகம்
ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
தனது
பாதுகாப்பு தொடர்பில் யாரிடமும் கைத்துப்பாக்கி பெற்றுக்கொள்ளவில்லை என அனந்தி சசிதரன்
மறுப்புத் தெரிவித்திருந்த நிலையில் குறித்த கோரிக்கை கடிதம்
வெளியாகியுள்ளது.
மேலும்,
நேற்றைய தினம் இடம்பெற்ற சபை
அமர்வின்போது அனந்தி சசிதரன் தன்னிலை
விளக்கம் அளிக்க முற்பட்ட வேளையில்
சபையில் அமளி துமளி ஏற்பட்டமை
குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment