கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதி,
சேவைகளின் சிகரம்
ஏ.ஆர்.மன்சூர் மரணமடைந்து இன்று ஒரு வருடமாகும்



பிரதேசத்திற்கும், மக்களுக்கும் சேவைகள் செய்யக் கூடிய சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையில் மதிக்கக்கூடிய கல்முனை பிரதேசத்தின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான கலாநிதி ஏ.ஆர். மன்சூர் அவர்கள் மரணமடைந்து இன்று (2018.07.25) ஒரு வருடமாகும்
மர்ஹும் கலாநிதி .ஆர். மன்சூர் அவர்கள் 1977 தொடக்கம் 1994ம் ஆண்டு வரையிலான 17 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராகவும், யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு  மாவட்ட அமைச்சராகவும், வர்த்தக, வாணிபம் மற்றும் கப்பல்துறை அமைச்சராகவும் பணியாற்றி அரசியலிருந்து  கெளரவமாக ஓய்வு  பெற்றவர். பின்னர் சில ஆண்டுகள் குவைத் நாட்டின் இலங்கைக்கான தூதுவராகவும் பணியாற்றினார்.
அப்துல் றஸாக், முஹம்மது அப்துல் காதர் சரீபா உம்மா ஆகியோருக்கு இளைய மகனாக 1933.05.30 ஆம் திகதி .ஆர்.எம். மன்சூர் பிறந்தார்.
தற்போதுள்ள அரசியல்வாதிகளைப் போல் அரசியல் இருப்புக்களை தக்கவைத்துக்கொள்ள குறுக்கு வழிகளை செயற்படுத்த விரும்பாத மிகவும் நேர்மையான அரசியல்வாதியாக இறுதிவரையில் செயற்பட்டுவந்தவர். சமூக பொறுப்புகள் நிறைந்த, சமூக நெருக்கடிகளுக்கு மத்தியில் உயர்ந்த சமூக குறிக்கோள்களைக் கொண்டிருந்தார். ஆயுதக் கலாசாரத்தை அறவே வெறுத்தவர்.
தன்னுடைய அரசியல் காலகட்டத்தில் இனவாத தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த போதும் அதை தன் குறிக்கோளை கருக்கி விடாத வகையில் தன்னையும் முரண்பட்டுக்கொள்ள இருந்த சமூகங்களையும் தன்னால் முடிந்தளவு புரிந்துணர்கவுளை ஏற்படுத்தி காத்துக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு செயலாற்றியவர். பிரதேசத்தில் கல்வரங்கள் எற்பட்டபோதெல்லாம் தமிழ் பிரமுகர்களையும் முஸ்லிம் பிரமுகர்களையும் ஒன்று கூட்டி தமிழ் முஸ்லிம் ஐக்கியத்துக்காக அயராது உழைத்தவர்  சமாதானத்தை உண்டுபண்ணியவர்.
அன்னார்விடாமுயற்சி உடையவராகவும் உயர் இலக்குகளைஅடையும் ஆற்றல் கொண்டவராகவுமே காணப்பட்டார். மக்கள் நலன் அவர் மனதில் எப்போதும் காணப்பட்டது. ஏழைகளின் உயர்ச்சிக்காக அவர் அயராது உழைத்தவர். அவர் இதைபுகழுக்காகச் செய்யவில்லை. மாறாகசமூகத்தில் கீழ் மட்டத்தில் உள்ளவர்களுக்குஉதவவேண்டும் என்றஉயரிய நோக்குடன் அர்ப்பணத்தோடுஅதில் ஈடுபட்டவர்.
அன்னாரின் கரங்கள் சுத்தமானவை ,அவரின் சாதாரண வாழ்க்கை செல்வத்தை வேண்டி நிற்கவில்லை. அவர் குறைந்தளவு வசதிகளோடு எளிமையாக வாழ்ந்தார். ஆனால் அவரி;ன் உள்ளம் எப்போதுமே பெரியதாக இருந்தது. அதுதான் அவரை எல்லோரும் விரும்பும் ஒரு நபராகவும் மாற்றியது. அவரின் எளிமையும் பண்பும் அவர் பழகிய மக்களைக் கவர்ந்தது.
எவ்வாறாயினும் தொடர்ந்து வந்த அரசியல் சந்தர்ப்பவாதம் பல பொய்களை மக்கள் மத்தியில் விற்பனை செய்து ஏமாற்று வித்தைகளைப் பரப்பி அரசியல் ரீதியாக மக்களிடம் இருந்து அவரை ஓரம் கட்டியது. பிரிவினைவாதஅரசியலில் சிக்கி மன்சூரை கைவிட்டது எவ்வளவு பெரிய மகாமடத்தனம் என்பதைப் புரிந்து கொள்ள கிழக்கு மாகாண மக்களுக்கு குறிப்பாக கல்முனைப் பிரதேச மக்களுக்கு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகள் சென்றன.
தொழிலற்றவர்களுக்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தொழில்களை பெற்றுக் கொடுத்தார். தனது தொகுதியிலும் தொகுதிக்கு வெளியிலும் கூட பல்வேறு துறை சார்ந்த தொழில்களை இவர் பெற்றுக்கொடுத்தார்..மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கினார். பொதுநூலகங்கள், அரச துறையினருக்கான கட்டடங்கள், பாடசாலை அபிவிருத்தி, வணக்கஸ்தலங்களின் அபிவிருத்தி, அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி, கல்முனையில் அரச செயலகக் கட்டடம், குடிநீர் வசதி, சந்தை வசதி என இவரது சேவைகளை இவ்வாறு அடுக்கிக் கொண்டே செல்லலாம். சந்தர்ப்பவாதமோ, இனரீதியான சிந்தனையோ அரசியல் பழிவாங்கல்களோ அவரிடம் இருக்கவில்லை.
தனது அரசியல் காலத்தை தன்னை மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தகையான மர்ஹும் .ஆர்..மன்சூரின் அரசியல் பயணம் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாகும்.
அன்னாரின் சேவைகள் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களின் உள்ளங்களில் இன்னமும் பசுமையாகஉள்ளன.
அன்னார் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த போது அவரைச் ந்திக்கச் சென்ற ஒரு கோடீஸ்வர வர்த்தகக் குழுவில் ஒருவர் அவருக்கு இலஞ்சம் வழங்கும் வகையில் பேசிய போது தனது ஆசனத்தில் இருந்து எழுந்து நின்ற மன்சூர் நான் அமைச்சராக இருக்கும் வரையில் இனி நீங்கள் இங்கு வரக் கூடாது என்று சொல்லி அவரை அங்கிருந்து வெளியேறும் படி கூறினார்.
ஊழலிலும் இலஞ்சத்திலும் சிக்கித் தவிக்கும் இன்றைய அரசியல் வாதிகளிடமிருந்தும் மிகவும் தூரமான ஒரு விடயமாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது.
பிரதேசத்திற்கும், மக்களுக்கும் சேவைகள் செய்யக் கூடிய சிறந்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடைசித் தலைமுறையைச் சேர்ந்த அன்னார் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 25 ஆம் திகதி எம்மை விட்டுப் பிரிந்தார்.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸுல் அஃலா என்ற மேலான சுவனவாழ்வு கிட்டவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக.
முன்னாள் அமைச்சர் அல்ஹாஜ் .ஆர்மன்சூர் நினைவு குறிப்புகள்
                                                             
குறிப்புக்கள்
1933.05.30
கல்முனைக்குடியில் எக்கின் தம்பி ஆலிம் அப்துல்றஸ்ஸாக் அவர்களுக்கும், முகம்மது அப்துல் காதர் சரிபா உம்மா அவர்களுக்கும்  ஆறாவது குழந்தையாகப் பிறப்பு
1943
ஆம் ஆண்டு அரசாங்கப் புலமைப் பரிசில் பரீட்சையில்சித்தி
1944
காத்தான்குடி முஸ்லிம் மத்திய கல்லூரியில் இணைந்துகற்றல்
1945 - 1947
ஆங்கில பாடசாலையாக அறிமுகமான கல்முனைஉவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் இணைந்து ஆங்கிலக்கல்வியை ஆர்வமாகக் கற்றல்.
1947
மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் இணைதல்
1948 - 1952
திருராஜகாரியர் அதிபராக இருந்த மட்டக்களப்பு அரசினர்கல்லூரியில் இணைதல்தமிழ் மொழியில் பாண்டித்தியம்பெற்ற  புலவர்மணி .பெரியதம்பிப் பிள்ளையிடம் கற்றல்.
1953 - 1954
உயர் கல்விக்காக கொழும்பு சென் ஜோசப் கல்லூரியில்சேர்ந்து உயர்தர தராதரப்பத்திர பரீட்சையில்சித்தியடைதல்.
1955 - 1958
கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைதல்இக்கல்லூரியின்தூது கோஷ்டிகளில் பங்குபற்றி பாகிஸ்தான் செல்லுதல்.
1958
உயர்நீதிமன்ற அப்புக்காத்தாக சத்தியப்பிரமாணம்.
1958 - 1961
பிரபல சட்டத்தரணிகளான ஜி.ஜி.பொன்னம்பலம்இஸ்ஸதீன் முகம்மட்.சி.எம்.அமீர்முன்னாள் பிரதமநீதியரசர் என்.டி.என்.சமரகோன் ஆகியோருடன் கனிஷ்டசட்டத்தரணியாக தொழில் புரிதல்.
1958
கேற்முதலியார் எம்.எஸ்.காரியப்பரின் மூன்றாவதுபுதல்வியான ஸொஹறா காரியப்பரைத் திருமணம்செய்தல்.
1964
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைதல்கல்முனை பட்டினசபைத் தேர்தலில் போட்டியிடுதல்.
1970
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கல்முனைத் தேர்தல்தொகுதியில் போட்டியிட்டு 955 குறைந்த வாக்குகள்வித்தியாசத்தில் துரதிஸ்டவசமாகத் தோல்வியுறல்.
1977
ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக கல்முனைத் தேர்தல்தொகுதியில் போட்டியிட்டு 5547 அதிகப்படியானவாக்குகளால் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராகத்தெரிவு செய்யப்படுதல்.  பாராளுமன்றத்தின் கணக்குக்குழு,நெடுஞ்சாலைகள் ஆலோசனைக் குழுபோக்குவரத்துச்சபை ஆலோசனைக் குழுகைத்தொழில் விஞ்ஞானஅபிவிருத்தி ஆலோசனைக் குழுகல்வி ஆலோசனை குழு,பிரதேச அபிவிருத்தி ஆலோசனைக் குழு என்பனவற்றில்இடம்பெற்றதோடு பேராதனைப் பல்கலைக்கழக செனட்சபை அங்கத்தவராகவும் நியமனம் பெறல்ஈராக்குவைத்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இலங்கை தூதுக்கோஸ்டியில் இடம்பெற்று நல்லெண்ண விஜயங்களைமேற்கொள்ளல்.
1979
யாழ்ப்பாண மாவட்ட அமைச்சராகவும் பின்னர்முல்லைத்தீவு மாவட்ட அமைச்சராகவும் நியமனம் பெறல்.
1980
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு இலங்கைதூதுக் கோஸ்டியில் இடம்பெற்று வாஷிங்டன்ஜப்பான்சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள முக்கியபிரமுகர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
1981
மத்திய கிழக்கு நாடுகளான சவூதி அரேபியாகுவைத்பஹ்ரைன்கட்டார்ஐக்கிய அரபு இராச்சியம்ஆகியவற்றிக்கு நல்லெண்ண விஜயங்கள் மேற்கொள்ளல்.
1989
இலங்கை பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐக்கியதேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் இடம்பெற்றுபாராளுமன்ற உறுப்பினராகவும்கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த முதலாவது முஸ்லிம் ஒருவராக அமைச்சரவைஅந்தஸ்துள்ள வர்த்தகவாணிபத்துறை அமைச்சராகவும்நியமனம் பெறல்.
குவைத் நாட்டின்  இலங்கைத் தூதுவர்இக்காலத்தில்தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மிகப் பெரியபணியினைச் செய்திருக்கிறார்குவைத் அரசாங்கத்தின் நிதிஉதவியுடன் இப்பல்கலைக்கழகத்தில் எட்டு கட்டிடங்கள்கிடத்துள்ளனபல்கலைக்கழக ஊழியர்களின் தங்குமிடவசதிக்கு கட்டப்பட்டுள்ள 23 தனித்தனி ஊழியர் விடுதிஇல்லங்கள்இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீடத்தின்அழகிய புதிய கட்டிடத் தொகுதிசுமார் ஆயிரம்மாணவர்களுக்கான  இரண்டு விடுதிக் கட்டிடங்கள்மாணவர் நலன்புரிக் கட்டிடம்பொறியியல்பீட கட்டிடத்தொகுதிகம்பிரமான விளையாட்டரங்கு என்பன இவற்றுள்குறிப்பிட்டுக் கூறப்படவேண்டியவைகளாகும்சுமார் 3000 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள குவைத் நாட்டு நிதி கொண்டு இப்பல்கலைக்கழகம் இந்த அனைத்து வசதிகளையும் வேறுஎந்தப் பல்கலைக்கழகமும் கிடைக்காதவகையில்பெற்றுக்கொண்டது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top