இம்ரான் கான்
21 ஆண்டு காலம் கிரிக்கெட்...
பல்கலை. வேந்தர்...
வர்ணனையாளர்...
22 ஆண்டு கால அரசியல்...




 இஸ்லமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இம்ரான் கானின் தெஹ்ரிக் இன்சாப் கட்சி 114 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இம்ரான் கிரிக்கெட் வரலாறு
லாகூரில் 1952-ம் ஆண்டு பிறந்த இம்ரான் கான் 1971-ல் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 1971 முதல் 1992 வரை 21 ஆண்டுகாலம் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தார். இம்ரான் கான் 1992-ம் ஆண்டு கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.  இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது.
பல்கலை. வேந்தர்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பின் லாகூரில் புற்றுநோய் மையத்தை தொடங்கினார். மேலும் பிராட்போர்டு பல்கலை கழகத்தின் வேந்தராக இம்ரான்கான் செயல்பட்டார்.
கிரிக்கெட் வர்ணனையாளர்
ஓய்வுக்கு பிறகு இம்ரான் கான் கிரிக்கெட் வர்ணனையாளராக சில ஆண்டுகள் செயல்பட்டார்.
அரசியல் பிரவேசம்
1996-ம் ஆண்டு பாகிஸ்தான் தெஹரிக் இன்சாப் என்ற கட்சியை இம்ரான் கான் தொடங்கினார். 2002-ம் ஆண்டு நடந்த பாகிஸ்தான் பொதுதேர்தலில் இம்ரான் கான் கட்சி ஒரு இடத்தை பிடித்தது. 2008 தேர்தலை புறக்கணித்த இம்ரான் கட்சி, 2013 பொதுத்தேர்தலில் போட்டியிட்டது. 2013 தேர்தலில் 7.5 மில்லியன் வாக்குகள் பெற்று 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. கட்சி தொடங்கி 22 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் ஆட்சியை பிடிக்கிறார் இம்ரான் கான். 

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top