அரச பாடசாலைகளில் கடமையாற்றும்
ஆசிரியர்களில் 73% பெண்கள்
கல்வி அமைச்சின் புள்ளிவிபரம் தெரிவிப்பு
இலங்கை நாட்டில் அரச பாடசாலைகளில் மொத்தமாக 2 இலட்சத்து 41 ஆயிரத்து 18 ஆசிரியர்கள் மாணவர்களின் கல்வி போதனைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் புள்ளி விபரம் தெரிவிக்கின்றது.
இவர்களில் 64 ஆயிரது 488 பேர் (27%) ஆண்களாகவும் 1 இலட்சத்து 76ஆயிரத்து 530 பேர் (73%) பெண்களாகவும் உள்ளனர்.
மாவட்ட ரீதியாக ஆசிரியர்களின் எண்ணிக்கை விபரம்,
கொழும்பு –
17670
கம்பஹா -
16551
களுத்துறை - 11459
கண்டி - 17533
மாத்தளை - 6558
நுவரெலியா - 9922
காலி - 11501
அம்பாந்தோட்டை _
8440
மாத்தறை - 10331
யாழ்ப்பாணம் - 8903
கிளிநொச்சி - 2123
மன்னார் - 2047
முல்லைத்தீவு _ 1948
வவுனியா - 2817
அம்பாறை - 9359
மட்டக்களப்பு - 7038
திருகோணமலை – 5369
குருணாகல் - 19935
புத்தளம் - 8252
அநுராதபுரம் - 12361
பொலன்னறுவை - 5015
பதுளை - 13945
மொனராகலை - 6823
கேகாலை - 12002
இரத்தினபுரி - 13116
மொத்த ஆசிரியர்களில் 1 இலட்சத்து 6 ஆயிரத்து 742 பட்டதாரி ஆசிரியர்களாகவும் 1 இலட்சத்து 29 ஆயிரத்து 616 பேர் பயிற்றப்பட ஆசிரியர்களாகவும் 3 ஆயிரத்து 99 பேர் பயிற்சியற்ற ஆசிரியர்களாகவும் ஆயிரத்து 561 பேர் பயிலுநர் ஆசிரியர்களாகவும் இருந்து கொண்டிருக்கின்றனர்.
0 comments:
Post a Comment