வீசா இன்றி தங்கியிருக்கும் இலங்கையர்கள்
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வெளியேறுவதற்கு
3 மாதங்கள் கால அவகாசம்
சட்டவிரோதமாக
தங்கியுள்ள இலங்கையர்களை ஐக்கிய அரபு அமீரகத்தில்
இருந்து வெளியேறுவதற்கு
மூன்று மாதங்களை
பொது மன்னிப்புக்
காலமாக அந்த
நாடு அறிவித்துள்ளது.
நாளைய
தினம் (01) முதல் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம்
திகதிவரை மூன்று
மாத காலப்பகுதியை
பொதுமன்னிப்பு காலமாக அந்த நாட்டு அரசாங்கம்
அறிவித்துள்ளது.
இந்தக்
காலப்பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும்
எந்தவொரு இலங்கையரும்
எவ்வித தண்டப்பணத்தையும்
செலுத்தாமல் நாடு திரும்பமுடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த
காலப்பகுதியில் நாடு திரும்பும் அனைவரும்
புதிதாக விசாவினைப் பெற்றுக்கொண்டு மீண்டும் ஐக்கிய
அரபு அமீரகத்துக்கு
வர முடியுமெனவும்
குறிப்பிடப்படுகின்றது.
கடவுச்சீட்டு
காலாவதியானவர்களும் இந்தக் காலப்பகுதியில்
டுபாய் ஊடாக
கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment