பாகிஸ்தான், பிரதமராகிறார் இம்ரான் கான் !
நடந்து
முடிந்த பாகிஸ்தான்
பொதுத்தேர்தலில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்
கட்சி(பிடிஐ)
அதிக இடங்களில்
வெற்றி பெற்றுள்ளதால்,
அக்கட்சி தலைவரான
முன்னாள் கிரிக்கெட்
வீரர் இம்ரான்
கான் பிரதமராகும்
வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று
நடந்த தேர்தலில்
பதிவான வாக்குளை
எண்ணும் பணி
நடந்து வருகிறது.
இதுவரை வந்த
தகவலின் அடிப்படையில்,
பிடிஐ கட்சி
119 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
நவாஸ்
ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி
61 இடங்களிலும், பாகிஸ்தான் மக்கள் கட்சி 40 இடங்களிலும்,
மற்றவர்கள் 50 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இம்ரான்
கானின் பிடிஐ
கட்சி 119 இடங்களில்
முன்னிலை பெற்றிருந்தாலும்,
அக்கட்சிக்கு தனிப்பெரும்பானமைக்கு தேவையான 137 இடங்கள் கிடைக்கவில்லை.
அதேநேரத்தில்
தேர்தல் முடிவுகளில்
நம்பகத்தன்மை இல்லை என பாகிஸ்தான் முஸ்லிம்
லீக் கட்சி
குற்றம் சாட்டியுள்ளது.
இதனை தேர்தல்
ஆணையம் மறுத்துள்ளது.
0 comments:
Post a Comment