உள்ளம் கொள்ளை கொண்ட நைஜீரிய தேவதை!
உலகின்
மிக அழகான
குழந்தை என்று
கொண்டாடப்படுகிறாள் நைஜீரியாவைச் சேர்ந்த
5 வயது ஜேர்.
இவளது 3 படங்கள்
இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் பாராட்டுகளைப்
பெற்று வருகிறது.
"ஜேருக்கு என்று சிறப்பாக எந்த விஷயத்தையும்
செய்யவில்லை. பெரிய கண்களும் பளபளக்கும் தோலும்
அடர்த்தியான முடியுமாக இயற்கையிலேயே அழகாக இருக்கிறாள்.
இவளது
படங்களைப் பார்ப்பவர்கள்
உயிருள்ள குழந்தை
என்றே நினைப்பதில்லை.
அழகான பொம்மை
என்கிறார்கள் அவளைச் சிரிக்க வைக்க பெருமுயற்சி
செய்தேன். ஆனால்
அவற்றை விட
அவள் இயல்பாக
இருந்த படங்களே
தேவதையாகக் காட்டின. இவளது கண்ணில் ஜீவன்
இருக்கிறது” என்று சிலாகிக்கிறார் ஒளிப்படக் கலைஞர்
மோஃப் பாமுயிவா.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.