விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்ட தேரர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சம்பவம்
வெளிநாடு
செல்வதற்காக விமானத்தில் ஏறிய நிலையில், உடுவே
தம்மாலோக தேரர்
கீழே இறக்கி
விடப்பட்டுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த
சம்பவம் இன்று
இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டுக்கு
பயணம் மேற்கொள்வது
தொடர்பான நீதிமன்ற
உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்த
திகதி தொடர்பான
குழப்பம் காரணமாக
அவர் விமானத்தில்
இருந்து இவ்வாறு
இறக்கிவிடப்பட்டுள்ளார்.
லண்டன்
நகரில் இந்த
வார இறுதியில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள
தர்ம போதனை
நிகழ்வுகளில் கலந்துக்கொள்வதற்காக உடுவே தம்மாலோக தேரர்
விமான நிலையத்துக்கு
சென்றுள்ளார்.
அதன்போது,
வெளிநாடு செல்வதற்காக
அனுமதி அவருக்கு
வழங்கப்படவில்லை என, விமான நிலைய அதிகாரிகள்
தெரிவித்துள்ளனர்.
எனினும்,
பின்னர் மேற்கொள்ளபட்ட
சோதனைகளின் பின்னர் அவர் லண்டன் செல்லும்
விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த
நிலையில், விமானம்
தனது பயணத்தை
ஆரம்பிப்பதற்கு சற்று முன்னதாக, அங்கு வந்த
விமான நிலைய
அதிகாரிகள், வெளிநாடு செல்வதற்கு உடுவே தம்மாலோக
தேரருக்கு அனுமதி
மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன்,
நீதிமன்ற உத்தரவில்
குறிப்பிடப்பட்டுள்ள திகதி தொடர்பில்
அவர் தேரரிடம்
சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து,
தேரர் விமான
நிலையத்தில் இருந்து திரும்பிச்சென்றதுடன்,
அவரது சட்டத்தரணி
இது குறித்து
நீதிமன்றத்துக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது.
இதேவேளை,
இந்த பிரச்சினைக்கு
தீர்வொன்றை பெற்றுக்கொண்டு இன்று அல்லது நாளைய
தினம் வெளிநாட்டு
பயணத்தை தொடரவுள்ளதாக
உடுவே தம்மாலோக
தேரர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment