கேரளாவில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கில்
தனது உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, கடந்த மாதம் அதே கேரளாவில் அதிக விமர்சனத்திற்கு
உள்ளான மீன் விற்று கல்லூரி
படிப்பை தொடர்ந்து வந்த ஹனான் ஹமீத்1.5 லட்சம் ரூபாயை கொடுத்து அனைவரையும் கண்ணீர் மல்க வைத்து உள்ளார்.
`தனக்குக் கிடைத்த ரூ.1.5 லட்சம் நன்கொடையை
நிவாரண நிதிக்கு அளித்த மீன் விற்ற மாணவி'
- கேரளாவில் நெகிழ்ச்சி!
கேரளாவில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கில் தனது உடைமைகளை இழந்து தவித்து வரும் மக்களுக்கு, கடந்த மாதம் அதே கேரளாவில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்து வந்த ஹனான் ஹமீத் 1.5 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுத்து அனைவரையும் கண்ணீர் மல்க வைத்து உள்ளார்.
தான் மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்த ஹனான் பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு வாலிபர் ஒருவர் கிண்டலாக பதிவு செய்து இருந்தார்.இந்த போட்டோ வைரலாக பரவியது. அப்போது, தனிப்பட்ட கவனத்தை ஈர்த்த ஹனானுக்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். மேலும் அவரை பற்றி யாராவது கிண்டல் செய்து பதிவு செய்தால், கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து ஹனானுக்கு அவரது வங்கி கணக்கில், நல்ல உள்ளங்கள் RS.2000,RS.500 என டெபாசிட் செய்ய தொடங்கினர். சிறு சிறு தொகை அதிகமாகி தற்போது அவருக்கு கிடைத்த ஒன்றரை லட்சம் ரூபாயை, வீடு இழந்து உடுக்க உடை இல்லாமல் தவித்து வரும் பாதிக்கப்பட்ட கேரளா மாநில மக்களுக்கு உதவ முதல்வரிடம் காசோலை கொடுக்க உள்ளார்.
தற்போது சாலைகள் மூடப்பட்டு உள்ளதாலும், நெட்வொர்க் கிடைக்காமல் இருப்பதாலும், அருகில் உள்ள வங்கிகள் மூடப்பட்டு உள்ளதாலும் தன்னால் அந்த தொகையை வங்கியில் செலுத்த முடியவில்லை. எனவே இன்று மாலைக்குள் அல்லது நாளைக்கும் முதல்வரை சந்தித்து காசோலை கொடுக்க உள்ளதாக மாணவி தெரிவித்து உள்ளார்.
தன்னுடைய அம்மாவையும், தன் தம்பியையும் கல்லூரி நேரம் போக மீதமுள்ள நேரத்தில் உழைத்து அவர்களை காப்பற்றி வந்த மாணவி மீது ஏற்பட்ட பரிதாபம் மற்றும் அவருடைய நல்ல எண்ணத்திற்கு கொடுக்கப்படும் மரியாதையாக அந்த மாணவியை வாழ்த்தினர் மற்றும் உதவினர்.
ஆனால் இன்று தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள் கூட வெள்ளத்தால் வீடு இழந்து உடைமைகளை இழந்து தவித்து வரும் அதே மக்களுக்கு தன்னிடம் இருந்த கடைசி தொகையான ஒன்றரை லட்சம் ரூபாய் முழுவதையும் மக்களுக்கே கொடுத்து உதவிய ஹனானுக்கு வாழத்துக்கள் குவிய தொடங்கி உள்ளது.
கேரளாவில் கல்லூரியில் பயிலும் மாணவி ஹனன், குடும்ப வறுமை காரணமாக மீன் விற்றுக் கொண்டு தனது படிப்பையும், குடும்பத்தையும் கவனித்து வந்ததார். இவர் பற்றி கட்டுரை மலையாள நாளிதழ் ஒன்றில் வெளியானது. கஷ்டத்துடன் போராடி குடும்பத்தை காப்பாற்றும் அவரை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். சில சினிமா இயக்குனர்கள் அவருக்கு வாய்ப்பளிப்பதாகத் தெரிவித்தனர்.
''கோதமங்கலம் பள்ளியில் தங்கவைக்கப்பட்டிருந்த மக்களை நானும் சென்று பார்த்தேன்.வீடு இழந்து சொந்த பந்தங்களை இழந்து தவித்து வருகின்றனர். நான்பட்ட கஷ்டத்தின்போது கேரள மக்கள் என் மீது காட்டிய அன்பை மறக்க முடியாது. இந்த மக்களின் அன்புக்கு கைம்மாறு செய்ய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கருதுகிறேன். மாத்ரூபூமி இதழில் என்னைப் பற்றிய செய்தி வெளியானதும், ஓரிரு நாளில் எனக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நன்கொடை கிடைத்தது. அதை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்'' என்று ஹனான் தெரிவித்திருக்கிறார்.
ஹனான் பற்றி இணையத்தளத்தில் அவதூறு பரப்பிய பிறகு, அவர் எந்த நன்கொடையையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது, ஹனான் இசை ஆல்பம் ஒன்றில் பாடி வருகிறார். பிரபல பின்னணிப் பாடகி `வைக்கம்’ விஜயலட்சுமியின் வாழ்க்கையை முன்வைத்து திரைப்படம் தயாரிக்கப்படுகிறது. அதில், நடிக்க ஹனானுக்கு அழைப்பு வந்துள்ளது. மிட்டாயி தெரு, வைரல் - 2019 ஆகிய படங்களிலும் நடிக்க ஹனான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நடைபெறவுள்ள இசை நிகழ்ச்சிகளில் மிமிக்கிரி ஆர்டிஸ்டாகப் பணியாற்றவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
0 comments:
Post a Comment