19 சீன, இலங்கை ஜோடிகளுக்கு பிரமாண்ட திருமணம்
சீனா
மற்றும் இலங்கையைச் சேர்ந்த
19 ஜோடிககள் நீர்கொழும்பில் உள்ள ஆடம்பர விடுதியில்
வியாழக்கிழமை பெரியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் திருமணம் செய்து கொண்டனர்.
12 சீன ஜோடிகளும், 7 இலங்கை ஜோடிககளுக்குமே நேற்று முன் தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இவர்கள்
அனைவரும், இலங்கையில் கட்டுமானப் பணியில்
ஈடுபட்டுள்ள சீனாவின் அரச கட்டுமான பொறியியல்
நிறுவனத்தின் பணியாளர்களாவர்.
‘அணை
மற்றும் பாதை
திட்டத்துக்காக ஒன்று கூடியுள்ளோம், நாங்கள்
இலங்கையில் திருமணம்
செய்தோம்’ என்ற
தொனிப் பொருளில்
இந்த பிரமாண்ட
திருமண நிகழ்வு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கொழும்பில்
உள்ள
சீனத் தூதரக அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி பாங் சுன்சூ
உள்ளிட்ட முக்கிய
பிரமுகர்கள் மற்றும் 300 விருந்தினர்கள்
இந்த திருமண
நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இந்தப்
புதிய திருமணங்கள்
மூலம், சீன- இலங்கை ஒத்துழைப்பு எதிர்காலத்தில்
பிரகாசமாகவும் செழிப்பாகவும் இருக்கும் என்று நம்புவதாக
சீனத் தூதரக
அரசியல் விவகாரங்களுக்கான
அதிகாரி சுன்சூ
தெரிவித்துள்ளார்.
மணமக்கள்
அனைவரும் சீன
கலாசார மரபுகளுக்கு
அமைய சிவப்பு
நிற ஆடைகளை
அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment