மஹிந்தவின் உண்மையான சுயரூபம் நேற்று வெளிப்பட்டது
பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின்
ஒருங்கிணைப்பாளர் தெரிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸசவை அவரின் பக்தர்கள் தெய்வமாக நினைத்தாலும் அவரது உண்மையான மனித சுயரூபம் ஊடகங்கள் முன்னால் நேற்று வெளிப்பட்டதாக பிரஜைகள் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த தசாப்தத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் பக்தர்களும், மஹிந்தவை தெய்வமாக மாற்றிய சில ஊடகங்களும், அவரை தெய்வம் என்றே நினைத்தன. இவர்கள் மஹிந்த ராஜபக்ஸவை தெய்வமாக மாற்றினர்.
இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ கடந்த காலம் முழுவதும் தெய்வமாக நடிக்க போய் சிக்கலில் மாட்டிக்கொண்டார். மஹிந்த ராஜபக்ஸச தெய்வ அருள் உடம்பில் வந்தது போலவே இருந்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள ஊடக சுதந்திரம், புதிய மாற்றம் என்பனவற்றின் புண்ணியத்தால், மஹிந்த ராஜபக்ஸவிற்கு தெய்வ அருள் இல்லாமல் போனதை நாங்கள் நேற்று கண்டோம்.
மஹிந்த ராஜபக்ஸ தனக்கு தெய்வ அருள் இருப்பதை திடீரென மறந்து போய், ஊடகங்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் இருக்கும் இடத்தில், தனது தனிப்பட்ட செயலாளரை பார்த்து இவன் முட்டாள் எனக் கூறினார்.
இறுதியில் எதுவும் செய்ய முடியாத நிலையில், தள்ளி போ எனக் கூறினார். இதுதான் மஹிந்த ராஜபக்ஸவின் உண்மையான சுயரூபம். இதனை நாங்கள் என்றோ அறிந்திருந்தோம்.
நாட்டு மக்களும் அறிந்திருந்தனர். 40 முதல் 42 லட்சம் வரையான மஹிந்தவின் பக்தர்கள் அறியாவிட்டாலும் நாங்களும் நாட்டு மக்களும் அறிந்திருந்தோம். இவை கடந்த காலங்களில் ஊடகங்களில் காட்டப்படவில்லை.
நாங்களும் ஊடங்களில் காணவில்லை. அவ்வாறான சம்பவங்களை ஊடகங்கள் வெளியிட்டிருந்தால், ஊடகங்கள் தரை மட்டமாக்கப்பட்டிருக்கும். எழுதியவர்கள், தாக்கப்பட்டிருப்பார்கள், காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள் அல்லது கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.
தற்போது ஊடக சுதந்திரம் இருக்கின்றது இப்போதுதான் மஹ்-ந்தவும் சாதாரண மனிதன் என்பதை நாங்கள் கண்டோம். மஹிந்த ராஜபக்ஸ, அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தூஷணத்தினால் பேசுபவர்கள் என்பதை நாட்டு மக்கள் அறிந்திருந்தனர்.
ஊடகங்கள் இருந்த காரணத்தினால், மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர் தப்பினார், இல்லை என்றால், கடுமையாக திட்டு வாங்கியிருப்பார். மஹிந்தவின் தனிப்பட்ட செயலாளர் முன்னாள் சபாநாயகர் டப்ளியூ.ஜே.எம். லொக்குபண்டாரவின் புதல்வர்.
மஹிந்த திட்டியதும் அப்பாவி போல் ஒதுங்கியதை பார்க்க முடிந்தது. தனது சகல வேலைகளையும் செய்யும் தனிப்பட்ட செயலாளரை மஹிந்த இப்படி பேசினார், என்றால், கீத் நொயாரை எப்படி பேசியிருப்பார் என்பதை எண்ணிப்பார்க்க முடிகிறது.
லசந்த விக்ரமதுங்க போன்றவர்களை எப்படி கவனித்திருப்பார். எக்னேலிகொட போன்றவர்கள் பற்றி புதிதாக பேச வேண்டுமா?. அமைச்சர்கள் பற்றி கூற வேண்டும். மகிந்தவிடம் தூஷணத்தில் திட்டு வாங்காத அமைச்சர்கள் இருப்பார்களா?.
அரச அதிகாரிகளை எப்படி பேசியிருப்பார். இதுதான் மஹிந்த ராஜபக்ஸ. மஹிந்த ராஜபக்ஸவின் உண்மையான மனித சுயரூபத்தையே எம்மால் நேற்று காண முடிந்தது எனவும் சமீர பெரேரா குறிப்பிட்டுள்ளார்
0 comments:
Post a Comment