இளம் தாயும் 4 வயது மகனும்
கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு


வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து 33 வயதான இளம் தாயும் அவரது 4 வயது மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
இன்று (15) காலை 11.30 மணியளவில் குறித்த இரு சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தாய் மற்றும் அவரது நான்கு வயது மகன் ஆகியோர் அவர்களது வீட்டின் முன்னால் உள்ள வீடு ஓன்றின் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பண்டாரிக்குளம் பொலிஸார், மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சடலங்கள் தொடர்பான நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரதேச பரிசோதனைக்காக சடலங்கள் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், வவுனியா தலைமையக பொலிஸாரின் தலையீட்டுடன், குற்ற தடயவியல் அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top