சட்டவிரோதமான முறையில் இலங்கைக்குள்
கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகள், ஆபரணங்களுடன்
கட்டுநாயக்கவில் இருவர் கைது



சட்டவிரோதமானமுறையில், இந்தியா மற்றும் டுபாய் ஆகிய நாடுகளில் இருந்து, கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுகள் மற்றும் தங்க ஆபரணங்கள் என்பவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று  (15), அதிகாலை விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோதே, விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலிருந்து தங்க பிஸ்கட்டுகளை கொண்டு வந்த, கொழும்பு பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வர்த்தகரிடமிருந்து, 1,30,00,000 ரூபாய் பெறுமதியான 20 தங்க பிஸ்கட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, டுபாயிலிருந்து வருகைத்தந்த 23 வயதுடைய புத்தளம் பகுதியைச் சேர்ந்த நபரிடமிருந்து, 1,58,18,775 ரூபாய் பெறுமதியான 3 கிலோ கிராம் தங்க ஆபரணங்கள் கைப்பற்றபப்பட்டுள்ளன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top