ஆப்கனில்
தற்கொலைப் படை தாக்குதல்
48
பேர் பலி
ஆப்கானிஸ்தானில் கல்வி அலுவலகத்தின் அருகே நடந்த தற்கொலைப்
படைத் தாக்குதலில் 48 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஆப்கான் உள்துறை அமைச்சகம் தரப்பில்,
"ஆப்கன் தலைநகரம் காபூலின்
மேற்குப் பகுதியில் ஷியா முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள
கல்வி அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த
தற்கொலைப் படை தாக்குதலில் 48 பேர் பலியாகினர். பலர் காயமடைந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலை தொடர்ந்து அங்கு தீவிரவாதிகளுக்கு வந்திருக்கக்
கூடும் என்று நினைத்து அவர்களுக்கு எதிராக பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்
சூடு நடத்தினர். ஆனால் இறுதியில் ஒரு தீவிரவாதி மட்டுமே இந்தத் தாக்குதலில்
ஈடுபட்டிருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும்
பொறுப்பேற்கவில்லை.
அமெரிக்க தலைமையிலான நேட்டோ படைகளின் அதிரடி நடவடிக்கைகளால்
கடந்த 2001-ம் ஆண்டு தலிபான்கள் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது.
எனினும், ஆப்கானிஸ்தானில்
அண்மைக்காலமாக பொதுமக்கள், ராணுவத்தினர், பொலிஸாரை
குறிவைத்து தலிபான்கள், ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment