இன்று மாலை 4 மணிக்கு இறுதிச்சடங்கு


முன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று(ஆக.,16) மாலை காலமானார். வாஜ்பாயின் இறுதிச்சடங்கு இன்று(ஆக.,17) மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக டில்லி விஜய்காட் பகுதியில் உள்ள ஸ்மிரிதி ஸ்தல் என்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதியம் 1.30 மணி முதல் 4 மணி வரையில் இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
இந்திய நாட்டு மக்கள் அனைவராலும் பெரிதும் நேசிக்கப்பட்டவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய், 93, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு, டில்லி, யமுனை நதிக்கரையில் இன்று மாலை நடக்கிறது. இதையடுத்து, 'நாடு முழுவதும், ஏழு நாள் துக்கம் அனுசரிக்கப்படும்; தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்' என இந்திய , மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் முன்னாள் பிரதமரும், பா.., மூத்த தலைவர்களில் ஒருவருமான, அடல் பிஹாரி வாஜ்பாய், கடந்த சில ஆண்டுகளாகவே, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். டில்லியில் உள்ள, தன் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார்.
இந்நிலையில், உடல் நிலை மோசம் அடைந்ததை அடுத்து, ஜூன், 11ல், டில்லி, எய்ம்ஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, திடீரென அவரது உடல் நலத்தில் பின்னடைவு ஏற்பட்டதாக, எய்ம்ஸ் டாக்டர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்து, அவரது உடல் நலன் குறித்து விசாரித்து சென்றனர்.
உயிர் காக்கும் கருவிகளுடன், 36 மணி நேரம், டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்த வாஜ்பாய், சிகிச்சை பலனின்றி, நேற்று மாலை, 5:05க்கு இறந்ததாக, எய்ம்ஸ் மருத்துமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.மருத்துவமனையில் இருந்து, நேற்று இரவு, அவரது உடல், நம்பர் 6, கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
பொதுமக்கள் அஞ்சலிக்காக, இன்று காலை முதல், டில்லியில் உள்ள, பா.., தலைமையகத்தில் வைக்கப்படவுள்ளது.
வாஜ்பாய் மறைவை அடுத்து, 'நாடு முழுவதும், ஏழு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்; நாடு முழுவதும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்' என, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சுற்றிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசு அலுவலகங்களுக்கு இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வாஜ்பாய் உடலுக்கு, இன்று பகல், 1:00 மணி வரை, பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். அதன் பின், பா.., தலைமை அலுவலகத்தில் இருந்து, இறுதி ஊர்வலம் தொடங்குகிறது.
 இறுதி ஊர்வலம், யமுனை நதிக் கரையில் உள்ள, ஸ்மிருதி தலத்தை சென்றடைகிறது. மாலை, 4:00 மணிக்கு, அவரது உடல், தகனம் செய்யப்படுகிறது.
வாஜ்பாய் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், பல்வேறு மாநில அரசுகள், இன்று ஒரு நாள் பொது விடு முறை அறிவித்துள்ளன.பல்வேறு மாநிலங் களின் முதல்வர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள், கவர்னர்கள், வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்து வதற்காக, டில்லி விரைந்துள்ளனர்.






0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top