மஹிந்தவிடம் CID யினர் 3 மணி நேர விசாரணை
ஊடகவியலாளர்
கீத் நொயார்
கடத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சுமார்
3 மணி நேர
விசாரணையின் பின், CID யினர் மஹிந்த ராஜபக்ஸவின் வீட்டிலிருந்து
சென்றுள்ளனர்.
இன்று
(17) முற்பகல் 11.00 மணியளவில், கொழும்பு
07, விஜேராம வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸஷவின்
வீட்டுக்கு வந்த குற்றப் புலனாய்வு பிரிவு
அதிகாரிகள் பிற்பகல் 2.00 மணியளவில் அங்கிருந்து சென்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த
சம்பவம் தொடர்பில்,
முன்னாள் பாதுகாப்புச்
செயலாளர் கோத்தாபய
ராஜபக்ஸ மற்றும்
முன்னாள் சபாநாயகர்
கரு ஜயசூரிய
ஆகியோரிடமும், குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம்
பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த
2008 மே மாதம்
22 ஆம் திகதி,
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு, சித்திரவதைக்குள்ளான
நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment