திராவிட முன்னேற்றக் கழகத்தின்
அதிக அதிகாரம் மிக்க தலைவராகிறார் ஸ்டாலின்



தி.மு. தலைவர் பதவிக்குத் தற்போது இருக்கும் அதிகாரங்களோடு சேர்த்து, பொதுச் செயலாளரிடம் இருக்கும் சில அதிகாரங்களையும் இணைக்க இருக்கிறார் ஸ்டாலின். இதன்மூலம், அதிக அதிகாரங்களோடுகூடிய தலைவர் பதவியில் அவர் அமர இருக்கிறார்.
கருணாநிதி மறைந்து விட்டதால், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை, தலைவர் பதவியில் அமர்த்த வேண்டும் என்ற பேச்சு, அவரது ஆதரவாளர்கள் மத்தியில் தற்போது கிளம்பி இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆக.19ல், தி.மு.., பொதுக்குழு கூட்டம், சென்னையில் நடக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் மூலம், கட்சி தலைவராக ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகள் தொடங்கி உள்ளன.முறைப்படி ஸ்டாலினை தேர்ந்தெடுப்பதற்கான எல்லா விஷயங்களையும், முதன்மை செயலாளராக இருக்கும் துரைமுருகன் செய்யத் தொடங்கி விட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
பொதுச் செயலாளராக நீண்ட நாட்களாக இருந்து வரும் அன்பழகனையும், வயது முதிர்வு காரணமாக, அப்பொறுப்பில் இருந்து விடுவித்துவிடலாம் என்ற யோசனைக்கும் ஸ்டாலின் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி நடந்தால், பொதுச் செயலாளர் பொறுப்பில் மூத்த தலைவர் துரைமுருகனை அமர்த்தும் யோசனையிலும் ஸ்டாலின் இருப்பதாகக் கூறப்படுகிறது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top