சகல சமூர்த்தி அதிகாரிகளுக்கும்
நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை
அமைச்சர் பி. ஹரிஸன் தெரிவிப்பு
சகல
சமூர்த்தி அதிகாரிகளுக்கும்
இவ்வருட இறுதிக்குள்
நிரந்தர நியமனம்
வழங்கப்படும் என்று அமைச்சர் பி. ஹரிஸன்
தெரிவித்துள்ளார்.
அவர்களுக்கு
ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கப்பட இருக்கிறது.
கடந்த
ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி அதிகாரிகள் அரசியல் நடவடிக்கைகளில்
ஈடுபடுத்தப்பட்டாலும், அவர்களுக்கு நிரந்தர
நியமனம் வழங்கப்படவில்லை.
தற்சமயம்
27 ஆயிரம் சமுர்த்தி
அதிகாரிகளும், நான்காயிரத்திற்கும் அதிகமான
சமுர்த்தி முகாமையாளர்களும்
உள்ளார்கள்.
இவ்வருட
இறுதிக்குள் மூன்று இலட்சம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்பட
இருக்கிறதாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஓய்வூதியம்
பெறுபவரிடம் இருந்த எந்த வரியும் அறவிடப்படுவதில்லை
என்று அமைச்சர்
ரஞ்சித் மத்தும
பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்ற
உறுப்பின்ர் தினேஷ் குணவர்த்தன எழுப்பிய கேள்விக்கு
அவர் பதில்
அளித்து உரையாற்றினார்.
2006 ஆம் ஆண்டு முதல் சம்பள
முரண்பாட்டை நீக்க அரசாங்கத்திற்கு முடிந்திருப்பதாவும் அவர் கூறினார்.
அரச
ஊழியர்களுக்கு கூடுதலான சலுகைகளை தற்போதைய அரசாங்கம்
வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
0 comments:
Post a Comment