ராஜபக்ஸவினர் ஊடகங்களை
கையாண்ட விதம் எனக்கு தெரியும்
மேர்வின் சில்வா தெரிவிப்பு

ராஜபக்வினரிடம் ஊடக சுதந்திரம் இல்லை எனவும் கடந்த காலத்தில் அவர்கள் ஊடகங்களை கையாண்ட விதம் பற்றி தனக்கு நன்கு தெரியும் எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் மேர்வின் சில்வாவின் வீட்டில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
ராஜபக்வினரிடம் எங்கே ஊடக சுதந்திரம் இருந்தது? ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்டார். இந்த கொலையின் மூலமே அவர்களின் ஊடக சுதந்திரம் எப்படியானது என்பதை அறியலாம்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த தலைவர்கள் இதனை அறிவார்கள். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், பெயர் விபரங்களை கூற மாட்டேன்.
அன்று ஊடகங்கள் நடந்து கொண்ட விதம், நடத்தப்பட்ட விதம், அழுத்தங்கள் கொடுப்பட்ட விதம் எனக்கு தெரியும். ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தில் வைத்து என் மீது தாக்குதல் நடத்தி எனக்கு அவமதிப்பை ஏற்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி ஹிந்த ராஜபக் மற்றும் கோத்தபாய ராஜபக் ஆகியோரே ஆலோசனை வழங்கியிருந்தனர்.
அப்படி செய்து விட்டு, மறுபுறம்உனக்கு வேண்டியதை நீ செய்என்று என்னையும் தூண்டி விட்டனர். அவர்களின் தூண்டுதலில் நான் அகப்படவில்லை.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் நான் நேரடியாக மோதினாலும், ஊடகங்களுக்கு எதிராக எதனையும் செய்யவில்லை.
ராஜபக்வினர் ஊடகங்களை சுதந்திரமாக இயங்கவிடவில்லை. ராஜபக்வினரிடம் ஊடக சுதந்திரம் என்பது கிடையாது.” எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top