நோபல் பரிசு பெற்ற .நா.சபை
முன்னாள் பொதுச் செயலாளர்
கோபி அன்னான் காலமானார்
(படங்கள்)

  ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச்செயலாளராக 10 ஆண்டுகள் பதவி வகித்த கோபி அன்னான் தனது 80-ம் வயதில் சுவிட்சர்லாந்தில் இன்று மரணம் அடைந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளராக பதவி வகித்தவர் கோபி அன்னான். கானா நாட்டில்  8-4-1938 அன்று பிறந்த இவர் 1-1-1997 அன்று இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 31-12-2006 அன்று ஓய்வு பெற்றார்.
"ஒரு சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைதியான உலகத்திற்காக உழைத்ததற்காக" கோபி அன்னான் மற்றும் ஐக்கிய நாடுகளுக்கு கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசு விருது வழங்கப்பட்டது.
பதவி ஓய்வுக்கு பின்னர் 23-2-2012 முதல் 31-8 -2012 வரை, சிரியாவிற்கான .நா. அரபு லீக் கூட்டுச் சிறப்பு பிரதிநிதியாக இருந்தார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் தங்கியிருந்த கோபி அன்னான்(80) உடல்நலக்குறைவால் இன்று மரணம் அடைந்ததாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது











0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top